அறிவியலாளர் மைக்கேல் ஃபாரடே நினைவு நாள் இன்று (25-08-1867)
வேதியியலாளராக வும் இயற்பியலாளராக வும் முக்கியமான பங்களிப்பைச் செய் திருக்கிறார் மைக்கேல் ஃபாரடே. மின்காந்த வியல், மின் வேதியியல் துறைகளில் இவர் அளித்த பங்களிப் பின் காரணமாக, மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இவர் முயற்சியின் காரணமாகவே மின்சாரம் பொதுப்…
நீதிக்கட்சி 15ஆவது மாநில மாநாடு திருவாரூரில் நடைபெற்ற நாள் (24, 25.08.1940)
1940-கள், தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. நீதிக்கட்சி தனது செல்வாக்கை இழந்து, தேக்க நிலையில் இருந்தபோது, தந்தை பெரியாரின் தலைமை, அந்தக் கட்சியை ஒரு புதிய பாதையில் இட்டுச் சென்றது. இந்த காலகட்டம், திராவிட நாடு கோரிக்கை வலுப்பெற்றது…
சமூக நீதியின் சிற்பி பி.பி.மண்டல் பிறந்தநாள் இன்று (25.08.1918)
பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல், சுருக்கமாக பி.பி. மண்டல் (1918-1982), இந்திய அரசியலில் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியவர். இவர் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அந்த ஆணையம் இவரது பெயராலேயே மண்டல் கமிஷன் என…
உடைத்துப் பேசிய நீதிபதி உஜ்ஜல் புய்யான்
போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் மற்றும் பல்கலைக் கழகத்தில் கடந்த மாதம் (ஜூலை 25) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நீதிபதி ஜி.பி.சிங் நினைவு நான்காவது சொற்பொழிவை நிகழ்த்திய உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அவர்கள், சட்டத் துறை குறித்தும் தீர்ப்புகள்…
மேல்ஜாதித் தத்துவம்
பார்ப்பான் என்பது - ‘மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற…
மாணவர்கள் போராட்டம் குறித்து தவறான சுற்றறிக்கை! சட்டப் பேரவையில் மன்னிப்புக் கோரினார் அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை, ஆக. 25- மாணவர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் முழுப் பொறுப்பேற்று சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி பேசும்போது,…
தஞ்சாவூரில் காவிரி டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, ஆக. 25- தஞ்சாவூரில் காவிரி டெல்டா கிராமங்களில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் ராய முண்டான்பட்டியைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு…
கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி தமிழ்நாடு அரசின் கண்டனம் குறித்து விவரம் கோரிக்கை
சென்னை, ஆக. 25- கருநாடக மாநில வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாகத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கவலையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வின் போது பேசிய…
மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக. 25- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (24.8.2026) உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளி்த்து பேசியபோது அமைச்சர்…
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு ஆறு மாதங்களாக தலைவரை நியமிக்காதது ஏன்? தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 25- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவரை கடந்த 6 மாதங்களாக நியமிக்காதது ஏன்? என தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம், உச்சிமலை குப்பம் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.பொன்னுசாமி,…
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதா? மாநில வளர்ச்சியை தடை செய்வதா? தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, ஆக. 25- ‘பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளி யிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத்தள்ளிவிடும்’ என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள எக்ஸ்தளப் பதிவு:…
வேலியே பயிரை மேய்வதா? கஞ்சா கடத்திய சிறைக் காப்பாளர் கைது
திருநெல்வேலி, ஆக. 25- கஞ்சா கடத்தலுடன் தொடர்பு வைத்து, தொடர் கடத்தலில் ஈடுபட்டு வந்த சிறைக் காப்பாளரை 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் பணத்துடன் காவல் துறையினர் கைது செய்தனர். திருநேல்வேலி டவுன் - குற்றாலம் சாலையில், காவல்…
