சென்னை, அக். 21- புதுச்சேரி திமுகவில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள் குறித்து தங்கம் தென்னரசு தலைமையிலான குழு, தனது பரிந்துரைகளை நவ.10ஆம் தேதிக்குள் வழங்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “பவளவிழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் தி.மு.க. புத்தெழுச்சியைப் பெற அடுத்த கட்டப் பயணத்தில் வெற்றிகளை அடைய, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழுவானது பல்வேறு பரிந்துரைகளை தலை வரிடம் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்பணி முழுவேகத்தில் நடைபெறும் அதே சமயத்தில், புதுச்சேரி மாநிலத்திலும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, புதுச்சேரி மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்சி சீரமைப்புகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக் குழு, நவம்பர் 10ஆம் தேதிக்குள் தனது பரிந்துரைகளை வழங்கிடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
