கனரா வங்கியில் பயிற்சிப் பணியிடங்கள்… தமிழ்நாட்டிற்கு மட்டும் 391 இடங்கள்

1 Min Read
- Advertisement -

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 பயிற்சிப் (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 391 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட உள்ளூர் மொழி பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரையானது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி காலத்தின்போது மாதம் 16,650 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். தகுதியான நபர்களைத் கல்வித் தகுதி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வங்கி நிர்வாகம் தேர்வு செய்யவுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. இதர பிரிவினருக்கு 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வமான nats.education.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *