அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
சென்னை, ஆக. 26- தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக ‘டிஎன்-அறிவு’ எனும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (24.8.2026) அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:…
விலைவாசி உயர்வுக்கு எதிராக ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக.26-அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
கருநாடக வனத்துறையினரால் சித்ரவதைக்கு உள்ளாகி மூன்று தமிழர்கள் கொலை என பேரவையில் உதயநிதி குற்றச்சாட்டு!
சென்னை, ஆக. 26- ‘கருநாடக மாநிலத்தில் வனத்துறையினரால் சித்ரவதை செய்து சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிதி மற்றும் சட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று …
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.48 ஆக உயர்த்துக! மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 26- ‘மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 48 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
மேட்டூர் அணையைத் திறக்கத் திட்டம்
சேலம், ஆக. 26- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப் பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூர் வந்து செல்லும் வகையில் முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணையி லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி…
அம்பேத்கர் பெயரனுடன் சந்திப்பு
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரனும், வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் அவர்களை மும்பைத் திராவிடர் கழகம் சார்பில் பெ.கணேசன், அ.இரவிச்சந்திரன், பெரியார் பாலா ஆகியோர் சந்தித்தனர். பிரகாஷ் அம்பேத்கர் அவர்களுக்கு, தந்தை பெரியார் சிலை, திராவிடர் கழக…
“நீட்” தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் (24.8.2026)
தல் குழு - சென்னை முதல் தாம்பரம் வரை காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தின் போது திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றி முடித்தவுடன் அப்பகுதியில் இருந்த பார்ப்பனர் ஒருவர் உரையை கேட்டுவிட்டு அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.…
உயர் சிறப்பு மருத்துவ காலி இடங்களை தமிழ்நாட்டிற்கு ஒப்படைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, ஆக. 25- தமிழ்நாட்டில் கலந்தாய்வு முடிந்த பின்னரும் காலியாக இருந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக் கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக் கப்பட்ட இடங்களை நிரம்பாமல் இருந்தால் அதனை முழுவதுமாக மீண்டும் தமிழ்நாடு அரசு…
பெரியார் விடுக்கும் வினா! (2055)
நாம் தமிழர் என்பதாக ஒரு சமுதாயமும், தமிழ்நாடு என்ற ஒரு நாடும் இருப்பதை உலகமறிய வாய்ப்பும், தமிழர் சமுதாயமென்று ஒரு சமுதாயம் இருப்பதை உலகம் தெரிய முடிந்ததற்கும் அய்ரோப்பியர் நமது நாட்டுக்கு வந்து அரசியல் ஆதிக்கம் செய்ய நேர்ந்ததால் விளைந்த நல்வாய்ப்பு…
திருப்புகழ் ஆணையம் அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையோடு சமர்பிக்கத் திட்டமிட்டிருந்தோம் திமுக மேனாள் அமைச்சர் கே.என்.நேரு
சென்னை, ஆக. 25- “திருப்புகழ் ஆணையம் அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகள் மீதும் நடவடிக்கைகள் எடுத்து, குறிப்புகளை இப்பேரவையில் வைக்க வேண்டும் என்று பணிகளை மேற் கொண்டிருந்த சமயத்தில் தேர்தல் வந்துவிட்டதால் சமர்ப்பிக்க முடியவில்லை” என திமுக மேனாள் அமைச்சர் கே.என்.நேரு…
கொளத்தூரில் த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு
சென்னை, ஆக. 25- கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில்…
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை
சிவகங்கை, ஆக. 25- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய பணியாளர்கள், கணினிகள் இல்லாததால், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் செப்டம்பரில் முழுமையாக செயல்படுத் துவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. உடல்நலம் பாதிப்பால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள்,…
