19 வயதுப் பெண் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. தலைவரை சிக்கிம் ஆளுநராக நியமித்ததற்கு மாணவர்கள் போராட்டம்!

- Advertisement -

டேராடூன், அக்.21- உத்தர காண்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியாக கூறப் படும் பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் குமார் கவுதம், சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.

உத்தரகாண்டின் பவுரி கார்வால் மாவட்டத்தில் உள்ள வனந்த்ரா சொகுசு விடுதியில் அலுவலக ஊழியராக 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார்.

இதையடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு இளம்பெண் அடையாளம் தெரியாத முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சொகுதி விடுதி உரிமையாளர் புல்கித் ஆர்யா மற்றும் இரண்டு ஊழியர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு 2023-ஆம் ஆண்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கிதா உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துஷ்யந்த் குமார் கவுதம் என்பவர் தான் என்று இளம்பெண்ணின் பெற்றோர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

அங்கிதாவின் கோரிக்கையை ஏற்று, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, 2026 ஜனவரியில் சிபிஅய் விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் குமாரை சிக்கிம் ஆளுநராக நியமனம் செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர் சிக்கிம் ஆளுநராக பதவியேற்க உள்ளார்.

இதையடுத்து அடையாளம் தெரியாத முறையில் உயிரிழந்த இளம்பெண் குறித்து சிபிஅய் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துஷ்யந்த் குமாரை புதிய ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது என மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போரட்டம் குறித்து அமைப் பாளர் அஞ்சலி கூறுகையில், “இது குடிமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்றும், பங்கேற் பாளர்கள் எந்தவித அரசியல் சார்புமின்றி ஒன்றுகூடியுள்ளனர்.

மக்களின் உணர்வுகள் சில காலமாக வலுப்பெற்று வந்தன. நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் மக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்த ஒரு தளத்தை விரும்பினர்.

அனுமதி பெறுவதற்கு நான் மற்றவர்களை சார்ந்திருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் நான் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் சென்றேன், அவர்கள் இங்கு போராட்டத்தை நடத்துவதற்கு எங்களுக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்தனர்.

அவர் பதவியேற்று கொண்டதால் மட்டும் எங்கள் குரல்கள் அடங்கி விடும் என்று அர்த்தமல்ல. நாங்கள் எங்கள் கவலைகளைத் தொடர்ந்து எழுப்புவோம்.

தற்போது இங்கு இல்லாத பலர் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் இதயங்கள் இந்த இயக்கத்துடனேயே உள்ளன. மக்கள்தான் அவர்களை ஆட்சியில் இருக்கச் செய்கிறார்கள்.

அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால், மக்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டும்.

நியமனம் நடந்தாலும், நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். நாங்கள் தொடர்ந்து அமைதியான முறையில் போராடி, எங்கள் எதிர்ப்புகளை எழுப்புவோம்,” என்று அஞ்சலி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *