இந்தியா வளர்கிறதாம்! அதிக கடன் சுமை உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 26ஆம் இடம்

- Advertisement -

 

அதிக கடன் சுமை உள்ள நாடுகளில் இந்தியா 26-ஆம் இடத்தில் உள்ளதாக பன்னாட்டு நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பன்னாட்டு நாணய நிதியம் (அய்.எம்.எப்.) ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் குறிப்பிட்டு அதிக கடன் சுமை உள்ள நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

வரி உட்பட அரசின் வருமானத்தைவிட அதன் செலவுகள் (நிர்வாகம், உட்கட்டமைப்பு, மானியங்கள்) தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, அரசாங்கங்கள் பற்றாக்குறையை சமாளிக்க தொடர்ந்து கடன் வாங்குகிறார்கள். உள்நாட்டுப்போர் மற்றும் மோதல்கள் காரணமாக, நாட்டின் உற்பத்தித் திறன் கடுமையாக வீழ்ச்சியடைகிறது. அதேநேரத்தில் பாதுகாப்பு செலவுகள் பல மடங்காக உயர்வதால் கடன்சுமை கட்டுக்கடங்காமல் போகிறது. பன்னாட்டு சந்தையில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது, ஏற்ெகனவே வாங்கிய கடன்களுக்கான வட்டியை கட்டுவதே நாடுகளுக்கு பெரும் சுமையாக மாறிவிடுகிறது.

இதனால் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இப்படியாக பல வகைகளில் நாடுகளின் கடன் சுமை அதிகரிக்கிறது.

அதன்படி, பன்னாட்டு நாணய நிதியத்தின் 2026 அக்டோபர் மாத அறிக்கையின்படி, உலகளாவிய வட்டி விகிதங்களின் உயர்வு, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஆற்றல் துறை நெருக்கடிகள் காரணமாக வளர்ந்துவரும் பல நாடுகள் கடுமையான கடன் சுமையை எதிர் கொண்டு வருகின்றன.

அந்த வகையில் அதிக கடன் சுமை உள்ள நாடுகள் பட்டியலில் 334.4 சதவீதத்துடன் முதல் இடத்தில் சூடான் நாடு இருக்கிறது. அதாவது நாட்டின் பொருளாதார மதிப்பு 100 எனில், கடன் 334 என்பதே இதன் அர்த்தம் ஆகும். சூடானில் உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் நிலைப்புத் தன்மை இல்லாமையால் நாட்டின் மொத்த உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு கடன் விகிதம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்த பட்டியலில் 2-ஆம் இடத்தில் 204.4 சதவீதத்துடன் ஜப்பான் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் 171.9 சதவீதத்துடன் 3-ஆம் இடமும், அதனைத்தொடர்ந்து பக்ரைன் (152.4 சதவீதம்), இத்தாலி (138.4 சதவீதம்), கிரீஸ் (136.9 சதவீதம்), செனகல் (132.3 சதவீதம்), மாலத்தீவுகள் (129.4 சதவீதம்), அமெரிக்கா (125.8 சதவீதம்), உக்ரைன் (122.6 சதவீதம்) என முதல் 10 இடங்களில் இந்த நாடுகள் முறையே இடம்பெற்றிருக்கின்றன.

கடன் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான கடன்கள் உள்நாட்டு செலவாணியிலேயே முதலீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பன்னாட்டு சந்தையில் இவை நம்பிக்கையான பொருளாதார நாடுகளாக கருதப்படுவதால் உடனடியாக பாதிப்பு ஏற்படுவதில்லை.

சிங்கப்பூரின் கடன் விகிதம் அதிகமாக இருந்தாலும், அந்த நாடு கடன் வாங்கும் பணத்தை உட்கட்டமைப்பு மற்றும் ஓய்வூதிய நிதிகளில் முதலீடு செய்து, அதிக சொத்துகளை தன்வசம் வைத்துள்ளது. இதனால் இது பூஜ்ஜிய நிகரக்கடன் கொண்ட வலுவான பொருளாதாரமாகவே இயங்குகிறது. தொடர்ந்து நடைபெறும் போர்ச்செலவுகள் மற்றும் பொருளாதாரச் சரிவு காரணமாக உக்ரைனின் கடன் சுமை உயர்ந்து வருகிறது.

இந்தியா இந்த பட்டியலில் 83.1 சதவீத கடன் சுமையோடு 26-ஆம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் கடன் சுமை ஓப்பீட்டளவில் பாதுகாப்புப்பான மற்றும் கட்டுக்குள் உள்ள ஒரு நிலையில்தான் இருப்பதாக பன்னாட்டு நாணய நிதியத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *