ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் 900 பேர் மீது வழக்குப்பதிவு!
ராஞ்சி, ஆக.24 ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 900க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேற்று (23.8.2026) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள் ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக்…
‘கர்மயோக்’ எழுதிய மோடிக்குக் கோயிலாம்!
பீகாரில் அரங்கேறியுள்ள இருவேறு நிகழ்வுகள், அம்மாநிலத்தின் தற்போதைய சமூக மற்றும் நிர்வாகச் சூழலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. பீகாரைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடியின் சிலைக்குப் பூஜைகள் செய்து, "மோடி சாலிசா" என்ற புகழ்மாலையைப் பாடி வழிபாடு நடத்தியுள்ளது.…
மோசடிக்காரர்கள்
மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோசமான வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். ('விடுதலை' 20.5.1948)
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையும், இரும்புக் கம்பிக்கான தொகையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது!
திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாவட்டத் தோழர்கள் இணைந்து பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூபாய், 8,17,000/- தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர் (திருச்சி, 23.8.2026) பெரியர் உலகத்தில் அமையவிருக்கின்ற கட்டடங்கள், பெரியார் முழு உருவச்…
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்!
நாள்: 3.9.2026 வியாழன் காலை 10 மணி இடம்: பெரியார் திடல், சென்னை–7 தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பொருள்: 1. நாடெங்கும் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவை புத்தெழுச்சியுடன்…
நன்கொடைகளைப் பெற்றுக்கொண்ட கழகத் தலைவர் ஆசிரியர் மனிதர்கள், மானமும் அறிவும் பெற மாலைநேர வகுப்பெடுத்தார்!
திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ரூ.8,17,000/- பெரியார் உலகம் நன்கொடையும், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் 18 டன் எஃகுக் கம்பிக்கான தொகையும் கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது! திருச்சி, ஆக. 24 திருச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில், திருச்சி…
அமெரிக்காவின் புதிய நடவடிக்கைக்கு ஆதரவளித்தால் கடும் விளைவுகள் ஏற்படும்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான், ஆக.24 ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளித்தால், பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவர் மொஹ்சீன் ரேசாய் எச்சரித்துள்ளார்.…
மகாராட்டிர அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் வெடித்ததில் மூன்று பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
அமராவதி, ஆக.24 மகாராட்டிராவின் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் வெடித்துச் சிதறியதில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று (24.8.2026) அதிகாலை 3.30 மணியளவில் 3 ஆவது…
இயக்குநர் அமிர்தம் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கருத்துரை
இன்றைக்கு வீட்டுக்கு வீடு டாக்டர்கள், பட்டதாரிகள் நம்மினத்தில் இருப்பதற்கு யார் காரணம்? திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனையே! சென்னை, ஆக.24 இந்த விழாவில் மணமக்களாக இருக்கும் இருவரும் டாக்டர்கள். இப்படி வீட்டுக்கு வீடு டாக்டர்கள், பட்டதாரிகள் நிறைந்திருப்பதற்குக் காரணம், திராவிட இயக்கத்தின்…
ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்த தமிழ்நாட்டு எஸ்சி, எஸ்டி மாணவர்கள்!
சென்னை, ஆக. 24- பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 36 உண்டு உறைவிட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள அய்அய்டி, எம்அய்டி, அய்அய்அய்டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ,…
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை 14ஆக குறைக்கும் முடிவு! வழக்குரைஞர்கள் கடும் எதிர்ப்பு
சென்னை, ஆக.24- தமிழ்நாட்டில் தற்போதுள்ள 32 மாவட்ட நுகா்வோர் நீதிமன்றங்களை 14-ஆக குறைக்கலாம் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதன்படி, தற்போது திருப்பூரில் இயங்கி வரும் மாவட்ட நுகா்வோர் நீதிமன்றமும், நீலகிரி மாவட்டத்தில் உதகையில் இயங்கி…
1978ஆம் ஆண்டின் தீர்ப்பு 2020 தொழிலாளர் சட்டத்துக்குப் பொருந்தாது – உச்ச நீதிமன்றம்!
புதுடில்லி, ஆக.24- 1978ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ‘தொழில்’ குறித்த விளக்கம், 2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தை விளக்குவதற்கு வழிகாட்டியாக இருக்காது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1978ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ‘தொழில்’ குறித்த விளக்கம், 2020ஆம்…
