மேகதாது அணைக்கு 16,745 கோடி ரூபாய் நிதி ஒதுக்க கருநாடக அரசு முடிவு என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?

1 Min Read
- Advertisement -

பெங்களூரு அக். 20- நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு, வரும் பட்ஜெட்டில் 16,745 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கருநாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணைத் திட்டத்திற்கு கருநாடக அரசு 16,745 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி திட்டம் தொடர்கிறது. தமிழ்நாட்டின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் கருநாடக அரசு உறுதியாக இருப்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது.

மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் சிவக்குமார், பெங்களூரு மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யவும், 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் மேகதாது திட்டம் மிகவும் அவசியமானது என்றார்.

அணை கட்டப்படுவதால் மூழ்கும் 5,000 ஹெக்டர் வனப்பகுதிக்கு மாற்றாக, வேறு நிலத்தை அடையாளங்காண மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். கடந்த ஆண்டில் மட்டும் 341 டிஎம்சி காவிரி நீர் வீணாகக் கடலில் கலந்ததாகவும் 177 டிஎம்சி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டதாகவும் சிவக்குமார் சுட்டிக்காட்டினார்.

நீர் வீணாவதைத் தடுக்க, கேஆர்எஸ், துங்கபத்ரா அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்ற தூர்வாரும் பணிகளைத் தொடங்க ஒன்றிய நீர்வள அமைச்சகம் கருநாடகாவுக்கு அறிவுறுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *