அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது “பெரியார் பன்னாட்டு அமைப்பு”. (Periyar International USA)
உலகளாவிய அளவில் தந்தை பெரியாரின் தத்துவங்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்ற விழாவில் 13.11.1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இதன் புரவலராக ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், தலைவராக மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களும் இருக்கின்றனர்.
இவ்வமைப்பின் பல்வேறு செயல் பாடுகளில் ஒன்றுதான், இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் பன்னாட்டு மனிதநேய மாநாட்டை நடத்துவது. அவ்வகையில் இதுவரை ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பன்னாட்டு மாநாடுகள் நடைபெற்றுள்ளன. ஒரு மாநாடு முடியும் தருவாயில், அடுத்த மாநாட்டிற்கான நாடு தேர்ந்தெடுக்கப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான மாநாட்டை ஜப்பான் நாட்டில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர் கி.வீரமணி – – ஜப்பான் உறவு!
ஜப்பானுடன் பெரியார் இயக்கத்துக்கு ஏற்கெனவே தொடர்பு உண்டு. சற்றொப்ப 40 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பொழுது, ஜப்பான் வழியாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திரும்புகிறார். அப்போது ஜப்பானில் இயங்கி வரும் மனிதநேய அமைப்பினரைச் சந்தித்து, அவர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரை நிகழ்த்திய செய்திகள் “விடுதலை” நாளிதழில் பதிவாகி இருக்கிறது. ஆக ஆசிரியருக்கும், ஜப்பான் நாட்டிற்குமான தொடர்பு என்பது பழமையானது.

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயணம் செய்திருந் தாலும், ஜப்பான் நாடு என்பது உணர்வு ரீதியாக நெருக்கம் என்பதை அருகில் இருப்போர் அறிவர். ‘விடுதலை’யில் எழுதி வரும் ‘‘வாழ்வியல் சிந்தனைகள்’’ பகுதியிலும் இதை நாம் அறியலாம். 2024 ஆம் ஆண்டு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை டோக்கியோ நகரில், ஜப்பான் தோழர்கள் நடத்தினர். அந்நிகழ்வில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், தி.மு.க. அயலக அணிச் செயலாளரும், மாநிலங் களவை உறுப்பினராகவும் இருந்த எம்.எம்.அப்துல்லா அவர்களும் பங்கேற்றனர். நிஷிகசாய் அருகேயுள்ள ஃபுனாபொரி கூடத்தில், மக்கள் திரளில் அது நடைபெற்றது.
இந்நிகழ்வை ஆவணமாக்கும் பொருட்டு “ஜப்பானில் பெரியார்” எனும் தலைப்பில், ஆசிரியர் அவர்கள் புத்தகமாகவே கொண்டு வந்துவிட்டார்கள். இதற்கும் முன்பாக, ‘தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள்’ மற்றும் ‘வைக்கம் போராட்டம்’ ஆகிய இரண்டு நூல்களும் தமிழில் இருந்து ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்தப் பணிகளைச் செம்மையாகச் செய்தவர்கள் ரா.செந்தில்குமார் மற்றும் ச.கமலக்கண்ணன் ஆகியோர்! தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று (2021 ஆம் ஆண்டு) பெரியார் திடலில் இந்நூல் வெளியிடப்பட்டது. சென்னையில் பணியாற்றிய ஜப்பானியத் தூதரக அதிகாரி “மியூகி இனோஉவே சான்” எனும் பெண்மணி கலந்து கொண்ட அந்நிகழ்வு, வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்தது.
பெரியார் காண விரும்பிய உலகம்!
இவ்வாறு ஜப்பானிற்கும், திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கும் நீடித்த தொடர்பு இருக்கிறது. கருத்தியல் அடிப்படையில் மட்டுமின்றி, மொழியியல் ரீதியாகவும் தமிழுக்கும் – ஜப்பானிய மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வந்துவிட்டன. திராவிடர் இயக்கம் வலியுறுத்திய கல்விதான், தமிழர்களை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் இருந்து மட்டுமல்ல; குக்கிராமங்களில் இருந்தும் அதிகமானோர் ஜப்பான் நிலப்பரப்பில் வாழ்கின்றனர்.

தந்தை பெரியார் காண விரும்பிய ஓர் உலகம் இருக்கிறது. அதற்குப் பொருத்தமான நாடு ஜப்பான். பெரியார் கொள்கைக்கும், ஜப்பானிய வாழ்வியலுக்குமான ஒற்றுமைகள் குறித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு நூல் வெளியிட்டுள்ளார்கள். அனைவரும் அதை வாசிக்க வேண்டும். மனிதரை மனிதர் மதிப்பது, நேர்மையாக நடந்து கொள்வது, வெளிப்படைத் தன்மையின் முக்கியத்துவம், சக மனிதர்களைப் பாராட்டுவது, தவறு செய்தால் தயக்கமின்றி மன்னிப்புக் கேட்பது, நேரத்தைச் சரியாகப் பின்பற்றுவது இவையெல்லாம் ஜப்பானியர்களின் வாழ்க்கை நெறிகள். இவை அங்கு இயல்பாக அமைந்துவிட்டன.
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் என்ன செய்தார்? சிறு வயது பிள்ளைகளுக்கும் வணக்கம் கூறினார், எழுந்து வரவேற்றார், மரியாதை செய்தார், நிகழ்ச்சிகளுக்கு நேரத்திற்குச் சென்றார், சொன்னதைச் செய்தார், செய்ததைச் சொன்னார். ஜப்பானில் என்னென்ன மனிதநேயச் செயல்பாடுகள் இருக்கிறதோ, அவற்றையே தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்கு மேலாகப் பிரச்சாரம் செய்தார். தமிழ்நாடு இன்றைக்கு இந்தளவு தனித்துவத்தோடு இருப்பதற்கு இந்தப் பகுத்தறிவுச் சிந்தனைகளே காரணமாகும். அதேநேரம் தந்தை பெரியார், “கடவுள், மதம், ஜாதியை மட்டுமே எதிர்த்தார்”, என்பதாக ஆதிக்கவாதிகள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்; மக்களை உசுப்பி விடுகின்றனர்.
நன்றித் திருவிழா!
தமிழ்நாட்டின் கிராமங்களில் இருந்து படித்து முடித்து 25, 30 வயதுடைய மகளிர் எல்லாம் டோக்கியோ நகரில் தனி வீடு எடுத்து தங்கி, தனியாக வேலை செய்கிறார்கள் என்றால், அதன் பின்னணி என்ன என்பதை நாம் அறிய வேண்டும்? இவர்களுக்குக் கடவுள், மதம், ஜாதி எந்த வகையில் உதவியது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
“உலக மக்களைப் போல மானமும், அறிவும் கொண்டு, சுயமரியாதைப் பெற்று உன்னத வாழ்வை வாழ வேண்டும்”, என்பதற்காகவே தந்தை பெரியார் போராடினார். அதற்கு இடையூறாக இருந்த அத்தனைக்கும், தனது உயிரையே விலையாகக் கொடுத்தார். இன்றைக்குக் கல்வி வளர்ந்து, ஆற்றல் பெருகி அகிலமும் நமது தமிழர்கள் பெருமைப்பட வாழ்கிறார்கள். அதுதான் பெரியாரின் கொள்கை மயம்; உலகமயம்! இதைப் புரிந்து கொண்ட இனவுணர்வுத் தமிழர்கள், தங்களின் மேன்மைக்குக் காரணமான தத்துவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே பன்னாட்டுத் தோழர்கள் பங்குபெறும் வகையில் மாநாடு கூட்டி மகிழ்ந்தார்கள். அதுதான் “அய்ந்தாவது பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடாக” ஜப்பான் நாட்டில் பொறிக்கப்பட்டது!
(தொடரும்)
மெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது “பெரியார் பன்னாட்டு அமைப்பு”. (Periyar International USA)