அர்ச்சகனா? திருடனா? எல்லாம் கடவுள் செயலோ!

2 Min Read
- Advertisement -

தூத்துக்குடி, அக். 20-  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோயில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை கோயில் காவல் துறையினர் கைது செய்தனர்.

அர்ச்சகரை சிறையில் அடைக் காமல் காவல்துறையினர் சொந்தப் பிணையில் விடுவித்து விட்டு, மற்றொரு நபரை சிறையில் அடைத்ததாக புகார் எழுந்துள்ளது. அர்ச்சகருக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு ஒரு நியாயமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக் கொடி மரம் உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோயில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்புக் படக் கருவியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் அர்ச்சகர் முருகன் என்ற முந்தன் மூலவர் எதிரே உள்ள உண்டியலில் நூதன முறையில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள கண்காணிப்புப் படங்களை ஆய்வு செய்தனர். அதில், கோவில் செப்புக் கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் ஒருவர் இதே மாதிரி உண்டியல் வாயிலில் துணி மற்றும் காகிதத்தை வைத்துத் திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் சுமார் 10,000 ரூபாய் திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் திருமுருகனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயில் அர்ச்சகர் முருகனை சொந்தப் பிணையில் விடுவித்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த போதிலும், தவறு செய்த அர்ச்சகரை சொந்தப் பிணையில் விடுவித்து விட்டு தவறு செய்த ஒருவரை சிறையில் அடைத்தது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *