சென்னை, அக்.22 வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் துரை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை (23ம் தேதி) உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி அது புயலாக மாறினால் அதன் தாக்கம் தமிழ்நாட்டிற்கு குறைவாக உள்ளது. அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் அதிகமான புயல் சின்னங்கள் உருவாவது இயல்பு. அந்த வகையில் வரும் நவம்பர் மாதத்தில் புயல்கள் உருவாகும் என எதிர்பார்க்கிறோம். நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு மிக அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
