பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு பரப்புரைக்காக சென்னை ‘மெட் இண்டியா’ மருத்துவமனைக்குப் பன்னாட்டு விருது

- Advertisement -

சென்னை, அக்.22 சென்னை ‘மெட் இண்டியா’ மருத் துவமனைக்கு அமெ ரிக்கச் செரிமான மண்டல மருத்துவக் கல்லூரியின்  (ACG) மதிப்புமிக்க ‘ஏசிஜி-ஸ்கோபி விருது’ (ACG-SCOPY Award) வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

‘மெட் இண்டியா’ மருத்துவமனையின் தலைவரும்,  செரிமான மண்டல மருத்துவ நிபுணரும், ‘சி5 ஸ்பார்க்’ திட்டத்தின் இயக்குநருமான மருத்துவர் டி.எஸ். சந்திரசேகர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

‘மெட் இண்டியா’ மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட ‘சென்னை பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்’ (Chennai Colon Cancer Community Chat – C5 Spark) என்ற சிறப்பு விழிப் புணர்வுப் பரப்புரைக்காக இந்த விருது கிடைத்துள்ளது. பன்னாட் டளவில் 8,000-க்கும் மேற்பட்ட செரிமான மண்டல மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று அமெரிக்காவின் நாஷ்வில் நகரில் நடைபெற்ற  ‘ஏசிஜி-யின் உலகளாவிய மாநாட்டில்’ இவ்விருது வழங்கப்பட்டது.

திட்டத்தின் நோக்கம்

பொதுமக்களுக்குப் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவதுமே ‘சி5 ஸ்பார்க்’ முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *