அகமதாபாத்தில் பரபரப்பு: ஆன் பிராங்க், மலாலா புத்தகங்களுக்குத் தடை அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு!
அகமதாபாத், ஆக. 28- குஜராத் மாநிலம் அகம தாபாத்தில் உள்ள ஆனந்த் நிகேதன் பள்ளி நூலகத்தில், உலகப் புகழ்பெற்ற ஆன் பிராங்கின் 'ஒரு இளம் பெண்ணின் டைரி' மற்றும் மலாலா யூசுப்சாயின் 'ஐ அம் மலாலா' ஆகிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த விவகாரம்…
விழுப்புரம் அருகே கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் படிமங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம் ஆக. 28- ‘விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ராயப்புதுப்பாக்கத்தில் காணப்படும் 7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் படிமங்களைப் பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘புவியியல் வரலாற்றில் கிரிட்டியேசியஸ்…
செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து
சென்னை, ஆக. 28- செம்மஞ் சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு அதிக அளவில் முக்கியத் துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு…
மணவிலக்கு ஒப்பந்தத்தில் கைவிடப்பட்ட நிதி உரிமைகளை மீண்டும் கோர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஆக. 28- 'மணவிலக்கின் போது, வாழ்வூதியம் உள்ளிட்ட நிதி உரிமைகள் வேண்டாம் என்று ஒப்பந்தத்தில் மனைவி கையெழுத்திட்ட பின் பிற்காலத்தில் அதை மீண்டும் கோர முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவை சேர்ந்த இணையர், 2016இல் இணைந்த சம்மதத்துடன்…
டில்லியில் இந்தியா தலைமையில் 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு: இந்திய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!
புதுடில்லி, ஆக. 28- டில்லியில் 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு, இந்தியாவின் தலைமையில் செப்டம் பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.…
அமெரிக்காவில் பதின்ம வயதினர் இன்ஸ்டா, முகநூல் பார்க்க புதிய கட்டுப்பாடு
வாசிங்டன், ஆக. 28- இன்ஸ்டா கிராம், முகநூல் பயன்படுத்தும் பதின்ம வயதினருக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி, அமெரிக்காவில் 29 மாகாணங்களுடன் ஏற்பட்ட 18 பில்லியன் டாலர் (ரூ. 1.71 லட்சம் கோடி) மதிப்பிலான வரலாற்றுச்…
கிர்கிஸ்தானில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர்களின் பட்டியல் வெளியீடு
புதுடில்லி, ஆக. 28- ஆகஸ்ட் 31ஆம் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேசுவார் என்று…
விடுதலை வளர்ச்சி நிதி
மிதுன் காளியப்பன் - ஆரோக்கியமேரி இணையர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 36ஆவது திருமண நாள் வாழ்த்து பெற்றனர். திருமண நாள் மகிழ்வாக தமிழர் தலைவரிடம் ரூ.500 விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கினர்
ரூ.22,006 கோடிக் கடனில் ரூ.6.5 கோடி மட்டுமே செலுத்தும் சுபாஷ் சந்திராவின் திட்டத்திற்கு கடன் தீர்ப்பாயம் ஒப்புதல்!
புதுடில்லி, ஆக. 28- ஊடகத் துறை தொழிலதிபரும் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான சுபாஷ் சந்திரா, வங்கியிலிருந்து வாங்கிய மிகப்பெரிய அளவிலான கடனைத் தீர்க்க முன்வைத்த குறைந்தபட்ச மீட்புத் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. சுபாஷ் சந்திராவுக்கு நிலுவை…
பெரியார் மருந்தியல் கல்லூரி மேற்கொண்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
திருச்சி, ஆக. 28- திருச்சி - பெரியார் மருந்தியல் கல்லூரி Emmchak Formulations Pvt. Ltd., கே.எஸ். வாரியார்ஸ் அஷ்டங்கா ஆயுர்வேதா (Ashtanga Ayurvedics (P) Ltd.), புதுச்சேரி அருணா குருதிப் பரிசோதனை நிலையம் மற்றும் எக்ஸ்ரேஸ் (Aruna Clinical Laboratory…
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும் அகில இந்திய மாணவர் சங்கமும் இணைந்து செப்.5இல் டில்லியில் பேரணி
புதுடில்லி, ஆக. 28- டில்லியில், நடை பெறவுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) அமைதிப்பேரணிக்கு அகில இந்திய மாணவர் சங்கம் ஆதரவு தெரி வித்துள்ளது. நீட் வினாத்தாள் கசி வுக்கு எதிராக டில்லியில் சிஜேபி நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு…
அறிவு வளர்ந்தால் மடமை மறையும்
நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர் வேண்டுமானால் மில் தொழிலாலும், சினிமா தொழிலாலும், ஓட்டல் தொழிலாலும் கொள்ளை லாபம் அடைந்து கொழுத்த பணக் காரர்களாகி இருக்கலாமே ஒழிய, சாதாரண மக்களாகிய 100-க்கு…
