ஆவடி மாநகராட்சியின் மேயர் உதய்குமார் ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.50,000/- வழங்கியுள்ளார். மேயர் வழங்கிய நன்கொடையையும், திருமுல்லைவாயல் பகுதி கழகத் தலைவர் இரணியனும், ஆவடி மாவட்டத் தலைவர் கார்வேந்தன் – வனிதா ஆகியோரின் மகன் மருத்துவராகியுள்ளதை முன்னிட்டு மருத்துவர் கா.வ.கார்ல்மார்க்சும் இணைந்து பெரியார் உலகத்துக்கு நன்கொடை ரூ.25,000/- த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், செயலாளர் க.இளவரசன், மாவட்ட துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ், அயன்புரம் துரைராஜ் ஆகியோர். (சென்னை, 22.06.2026)
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
