டில்லியில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டன முழக்கம்!
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி மாநில தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து, டில்லியில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியார் சிலை முன்பாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன…
வேளாண் பட்ஜெட் திருப்பதி சென்றால் பாவம் போய்விடுமா? தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, ஆக. 4- ‘விவசா யிகளைச் சந்திக்காமல் புறக்கணித்து விட்டு, வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்குத் தூக்கி செல்வதால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?’ என தமிழ்நாடு அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள எக்ஸ்…
மக்கள் மன்றம், வீதிமன்றம் மட்டுமல்ல, நீதிமன்றத்தின் மூலமாகவும் உரிமையைப் பெறுவோம்!
தமிழ்நாடு அரசுக்கு, எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்! திட்டவட்டமாக, பிடிவாதமாக மறுக்கும் ஆளுங்கட்சி!! திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு! சென்னை, ஆக.4 காவிரிப் பிரச்சினையில் ஒத்த கருத்தை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கு, எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன!…
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது!
பழிவாங்கும் போக்கு என்பது ஜனநாயக விரோதமே! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை தமிழ்நாடு அரசு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை எந்தவித முகாந்திரமுமின்றி, திடீர் என்று கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது – ஜனநாயக விரோதமானது என்று திராவிடர்…
பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி – வெட்டிக்காடு 19ஆவது விளையாட்டு விழா – 2026-202
வெட்டிக்காடு, ஆக. 4- வெட்டிக் காடு, பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி தமது 19ஆவது விளையாட்டு விழாவினை கடந்த சனிக்கிழமை 01.08.2026 அன்று மாலை 2.45 மணியளவில் தொடங்கி சிறப்பாக கொண்டாடியது. விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர்…
த.வெ.க. அரசை கண்டித்து தஞ்சையில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்
* மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக! *விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்துச் செய்க! *டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திடுக! தஞ்சாவூர், ஆக. 4- கருநாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், விவசாய பயிர்க்…
இந்நாள் – அந்நாள்
கவிஞர் ஷெல்லியின் பிறந்தநாள் இன்று (4.8.1792) சமூக நீதி, தனிமனித சுதந்திரம், மற்றும் அடக்கு முறைக்கு எதிரான புரட்சிகரக் கருத்துகளைத் தம் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர். ஆகஸ்ட் 4, 1792 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். இளமையிலேயே சுதந்திரமான சிந்தனைகளைக் கொண்டிருந்த இவர்,…
குரு – சீடன்
சீடன்: ‘ராமன் கோவில் காணிக்கை எண் ணுவதில் தீவிர கண்காணிப்பு’ என்று செய்தி வந்துள்ளதே குருஜி! குரு: ராமன் கடவுள் – சக்தி என்பது எல்லாம் சுத்த ‘அம்பக்’கென்று இப்பொழுதாவது பக்தி மான்கள் தெரிந்து கொண்டால் சரி, சீடா!!
மாணவர்களை ‘டிவிகே’ முழக்கம் போட வைத்ததால் சர்ச்சை!
காரைக்குடி, ஆக.4- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு மாடல் பள்ளி வளாகத்தில், 2.8.2026 அன்று மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை துவக்கி வைக்க அமைச்சர் பிரபு பள்ளி வளாகத்தில் நுழைந்தார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சொல்லி கொடுத்தது…
நல்லா இருக்கீங்களா? – அமைச்சர் நாங்க நல்லாயில்ல – பொதுமக்கள் ஆய்வுக்குச் சென்றபோது அதிர்ச்சிப் பதில்
காரைக்குடி, ஆக. 4- சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் கிரசர் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டநிலை, சித்தமல்லிப்பட்டி உள்ளிட்ட 5 கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த…
மக்களை ‘எறும்புகள்’ என்பவர் நீதிபதி ஆகிறார்! கொலீஜியம் முறையைச் சாடிய உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான்
புதுடில்லி, ஆக. 4- கொலீஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் தான், சாமானிய மக்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் கூட நீதிபதிகளாக உயர்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். விமர்சனம் இந்திய நீதித்துறையில் நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலீஜியம்' முறை…
‘நீட்’ கலந்தாய்வு தாமதம்! பொறியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக இடம் பிடிக்கும் மருத்துவ மாணவர்கள்!
புதுடில்லி, ஆக. 4- நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை நீட் நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மறுதேர்வு காரண மாக, வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாமல் தள்ளிப்போயுள்ளது. வரும் ஆகஸ்ட் கடைசி…
