திருவள்ளூர் இறால் ஆலை அமோனியா கசிவு! உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

2 Min Read

திருவள்ளூர், ஜூன் 22- திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண் தொழிலாளர்கள் இன்று (22.6.2026) அதிகாலை உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அருகே உள்ள தனியார் இறால் ஏற்றுமதி ஆலையில் குளிர்பதன அமைப்பில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிந்தது.

அப்போது பணியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டு பாதிக் கப்பட்டனர்.

விபத்தில் ஏற்கெனவே 2 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மோசமாக பாதிக்கப் பட்டவர்கள்சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி ஒருவர் இன்று (22.6.2026) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பெண் தொழி லாளியும் உயிரிழந்தார். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ள தாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

நிகழ்வு குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விபத்து நடந்த ஆலையில் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆலையின் பாதுகாப்பு உரிமம் மற்றும் பராம ரிப்பு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக் கவும், அவர்களின் குடும் பங்களுக்கு உதவித் தொகை வழங்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு ஆலை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

அமோனியா போன்ற அபாயகரமான வாயுக்களை கையாளும் ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும், இதுகுறித்து முழுமையான ஆய்வு நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவை வலியுறுத்தியுள்ளன.

காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *