சென்னை, மே 12- தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குற்றப்பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பான ஏ.டி.ஆர். ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் 233 சட்டமன்ற உறுப்பினர் களில் 54 சதவிகிதத்தினர் அதாவது 126 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
கட்சிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக த.வெ.க.-வின் 107 சட்டமன்ற உறுப்பினர்களில் 41 பேர் வழக்குகளில் சிக்கியுள்ளனர். மேலும், 107 சட்டமன்ற உறுப்பினர்களில் 56 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதில் த.வெ.க. சார்பில் 19 பேர், அ.தி.மு.க. சார்பில் 14 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர் கடுமையான வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களில் 2 பேருக்கு எதிராக கொலை வழக்கும், 6 பேருக்கு எதிராக கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
குற்றவியல் வழக்குகளில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதலிடம்! ஏடிஆர் அறிக்கை அதிர்ச்சித் தகவல்
Leave a Comment
