லண்டன், ஜூன் 22- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு அவரது சொந்தக் கட்சிக்குள் (தொழிலாளர் கட்சி) எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் சில அமைச்சர்கள் பதவி விலகியதால் ஸ்டார்மருக்கு நெருக்கடி அதிகரித்தது.
பதவி விலக முடிவு
இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலக ஸ்டார்மர் முடிவு செய்து உள்ளதாகவும், தனது முடிவை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தொழிலாளர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி – அரசியல் அழுத்தம், கட்சிக்குள் தனக்கான செல்வாக்கு குறைந்து வருவது உள்ளிட்டவை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிகிறது.
தொழிற்கட்சி
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி மற்றும் பிராந்தியத் தேர்தல்களில் ஆளும் தொழிற்கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும் ஸ்டார்மருக்குப் போட்டியாகக் கருதப்படும் முன்னணித் தலைவரும், கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயருமான ஆண்டி பானம், மேக்கர் பீல்டு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி உள்ளார்.
அவரை தொழிற்கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுத்து பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியில் பெரும்பாலானோர் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் மிகப்பெரிய நிலத்தடி
வெப்ப ஏரி கண்டுபிடிப்பு!

அல்பேனியா, ஜூன் 22- உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை தெற்கு அல்பேனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அல்பேனியாவில் உள்ள அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
இந்த ஏரி 138 புள்ளி 3 மீட்டர் நீளமும், 42 மீட்டர் அகலமும் கொண்டது, மேலும் 345 மீட்டர் சுற்றளவு கொண்டது. இது 8 ஆயிரத்து 335 கன மீட்டர் வெப்ப கனிம நீரைக் கொண்டுள்ளது, இது ஒரு அசாதாரண இயற்கை அதிசயம் என கூறுகின்றனர் விஞ்ஞானிகள். 25 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில், 2.9 லட்சம் கன அடி கனிமங்கள் நிறைந்த 79 டிகிரி வெப்பமான நீர் உள்ளது.
இந்த ஏரியை முதன் முதலில் 2021ஆம் ஆண்டு செக் குடியரசின் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால் அதன் முழு அளவை மதிப்பிடுவதற்கான உபகரணங்கள் இல்லாத நிலையில், தற்போது 3D ஸ்கேனர்களுடன் விஞ்ஞானிகள் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை கண்டுபிடித்துள்ளனர்.
லேக் நியூரோன் என்ற இந்த ஏரியின் அளவை ஆய்வாளர்கள் தற்போது உறுதி செய்துள்ளனர். 34,450 சதுர அடி பரப்பளவு, 25 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில், 2.9 லட்சம் கன அடி கனிமங்கள் நிறைந்த 79 டிகிரி வெப்பமான நீர் உள்ளது.
