திருப்பதி மீது தொடர்ந்து மோசடி செய்திகள் பல்வேறு இணையதளங்களை வைத்து பணம் பறிக்கும் வேலை
திருமலை ஆக. 15- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று (14.8.2026) விடுத்த அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி, ஆர்ஜித சேவைகளுக்கு பல போலி இணைய தளங்களை உருவாக்கி பக்தர்களை…
வேலூர் முள்ளிப்பாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய பனிக் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு
வேலூர், ஆக.15- முள்ளிப்பாளையத் தில் அனுமதியின்றி இயங்கி வந்த பனிக் கட்டி தயாரிக்கும் ஆலையில், சோதனை ஓட்டத்தின்போது திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த ஜூன் 21ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப் பேரில் உள்ள கடல்…
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
பெங்களூரு, ஆக. 15- காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்ட நிலையில், கருநாடக அரசு 10,000 கன அடி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டுள்ளது. கடந்த 11-ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக்…
மாணவர்களுக்கு போராடும் உரிமை உண்டு! உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஆக. 15- அய்தராபாத்தில் உள்ள தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அழைக் கப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து துணை வேந்தருக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள்…
ஆன்மிகம்?
நேற்று அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் கொண்டாடப்பட்டது. ஆண்டாள் அம்மையார் அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது. ‘‘திருவல்லிக்கேணி ஆண்டாள் திரு மஞ்சனமும், ஆண்டாள் பெரிய மாட வீதி புறப்பாடும் நடந்தன’’ என்று ஒரு நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது. ஆண்டாள் என்பவர் வைணவ மதத்தின் ஆழ்வார்களுள்…
அருவிக்குத்தி (கேரளா) பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தமா? தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்! மழை நின்றதும் பணிகள் தொடரும்!
சென்னை, ஆக. 15 கேரளா மாநிலம் அருவிக்குத்தியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நினைவு மண்டபக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளி வரத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் பலரும் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். இந்நிலையில் இந்தத்…
90 அகவை காணும் தொண்டறச் செம்மல் செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் வாழ்க! வாழ்க!
தமிழ்நாட்டின் தனிப்பெரும், பொதுவான தமிழ்ச் சான்றோர்களில் முக்கியமானவரும், எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமைத் தீயில் வாடி, அந்தப் பட்டறையில் பதப்படுத்தப்பட்டு, கடும் உழைப்பையே தனது மூலதனமாக்கி, இன்று மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உயர்ந்தவருமான உத்தமர், இன்று (15.8.2026) 90 வயது காணும்…
ஆசிரியருக்குக் கடிதம் பெருமைமிகு பெரியார் பிஞ்சுகள்!
அண்மையில் ஒரு காணொலி பார்த்தேன். ஒரு விளையாட்டுப் போட்டியில் மூவர் தேர்வு செய்யப்படுவர். பரிசு கொடுக்கும் நேரத்தில் ஒன்று, இரண்டு, மூன்று எனக் குறிப்பிடப்பட்ட உயரத்தில் அவர்கள் நிற்க வைக்கப்படுவர். திடீரென முதல் மேடையில் நிற்கும் சிறுவன் இரண்டாம், மூன்றாம் இடத்தில்…
காரைக்குடியில் விரைவில் அழகப்பா மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் அழகப்பா கல்விக் குழுமத் தலைவா் தகவல்
காரைக்குடி, ஆக.15 சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவா் ராமநாதன் வைரவன் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா கல்விக் குழுமத்தின் பவநகா் அரங்கில் 14.8.2026 அன்று செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காரைக்குடியில்…
செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (4)
நேற்று நாம் பார்த்தபடி உணவு முடித்து உடனடியாக 10 நிமிட நடைப்பயிற்சி செய்வதும், மொத்தமாக 7,000 அடிகள் நடப்பதும் எத்தகைய பயனைக் கொடுக்கும் என 57 ஆய்வுகள் நடத்தப் பெற்றன. அதன் மூலம் இப்பழக்கம் 47% இறப்பு வேகத்தைக் குறைப்பதும், 38%…
ராமன் கோயில் கொள்ளையைத் தடுக்க குறுக்கு வழியா?
ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளை ஒருதனியார் அறக்கட்டளை என்பதால், அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு "பொது அதிகார அமைப்பு" கிடையாது என்றும், எனவே இச்சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்கக் கடமைப்பட்டிருக்கவில்லை என்றும் தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.…
பயனுள்ள கொள்கையானால்…
ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால், அதற்கு இரண்டு சக்திகள் இருக்க வேண்டும். முதலாவது, அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு கூடவே அக்கொள்கை எல்லா மக்களாலும், எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல்…
