“அறிவியல் மனப்பான்மையும் – மூடநம்பிக்கையும்” – கருத்தரங்கம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தஞ்சை, அக். 11- தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், “செப்டம்பர்-17 சமூகநீதி நாள் ” தந்தை பெரியார்  148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 12.09.2026 அன்று தஞ்சை, மாதாக்கோட்டை சாலையில் உள்ள பொதுநலத்தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில்,  கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

நிகழ்வை மாவட்ட ப.க.தலைவர் ச.அழகிரி ஒருங்கிணைத்து நடத் தினார். மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு வரவேற்று உரையாற்றினார். நிகழ்வுக்கு பெரியார் தொண்டர் கை. முகிலன் தலைமையேற்று உரை யாற்றினார். போட்டியை மாநில ப.க.அமைப்பாளர் கோபு.பழனிவேல் தொடங்கி வைத்து பேச்சுப் போட்டியின் நோக்கம், விதிமுறைகள், மாணவர்கள் எவ்வாறு பேச வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துக் கூறினார்.

போட்டியில் பல்வேறு  கல்லூரிகளில் இருந்து மாண வர்கள் கலந்து கொண்டு “அறிவியல் மனப்பான்மையும், மூடநம்பிக் கையும்” எனும் தலைப்பில் உரை யாற்றினார்கள்.

மாணவர்களுக்கு பரிசு வழங்குவ தற்கு முன்பாக மாநில கழக ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரும், கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வனும் கருத்துரையாற்றினார்கள்.

தொடர்ந்து, தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநகரச் செயலாளர் இரா.வீரகுமார், தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன்  ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கினார்கள், இறுதியில் மாவட்ட ப.க.அமைப்பாளர் குழந்தை கவுதமன் நன்றி கூறினார்.

போட்டியின்,ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் ந.காமராசு, மாநில பெரியார் சமூகக் காப்பணி இயக்குனர் தே.பொய்யாமொழி, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏவிஎன் குணசேகரன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறப்பித்தார்கள். மாநகர கழகத் தலைவர் செ.தமிழ்செல்வன், மற்றும் அ.சாந்தி, அ.பெரியார் செல்வன், சாமி.கலைச்செல்வன், அ.குழந்தைசாமி, வெ.துரை, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரிசு பெற்றவர்கள்:

முதல் பரிசு: ச.பிரபாகரன்  அரசர் கலைக் கல்லூரி திருவையாறு.

இரண்டாம் பரிசு: செ.வசந்த குமார், அரசர் கல்லூரி திருவையாறு.

மூன்றாம் பரிசு: போ.வீரலெட்சுமி தமிழ்ப் பல்கலைக் கழகம் – தஞ்சாவூர்.

சிறப்புப் பரிசுகள்: நா.அரவிந்தன் தமிழ்ப் பல்கலைக் கழகம் – தஞ்சாவூர்.

ர.தயாநிதி பண்ணாரி அம்மன் கல்லூரி ஈரோடு .

அ.யமுனா சட்டக் கல்லூரி – திருச்சி .

பரிசுத்தொகை வழங்கிய நன்கொடையாளர்கள்:

ஆசிரியை ந.பாவேந்தி ரூ.3,000/=

சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர்  பி.வி.இராமச் சந்திரன் நினைவாக அவர்களின் மகன் பேராசிரியர் முனைவர் பி.வி.ஆர். வீரமணி ரூ.2,000/=

சுயமரியாதைச் சுடரொளி பெரியார் தொண்டர் தென் கொண்டார் இருப்பு செ.காத்தையன் நினைவாக  அவரது மகன்கள் கா.பிரபாகரன், கா.இமயவரம்பன் ஆகியோர் ரூ.2,000/=

பூதலூர் ஒன்றிய ப.க. செயலாளர் க.சிவசாமி பிரபு தனது வாழ்விணையர் மறைந்த செல்வநாயகி நினைவாக ரூ.1,000/=

சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியை மலர்க்கொடி நினைவாக பாவலர் பொன்னரசு ரூ.1,000/= வழங்கினார்.

வருகை தந்து பேசிய மாண வர்கள் அனைவருக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.100/= பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் வை.இளங்கோவன் வழங்கினார்கள்.

நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *