நாகர்கோவில், அக்.11- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் 02.10.2026 அன்று மாவட்ட கழகத் தலைவர் மா. மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பிரச்சாரத்தினைத் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், தோவாளை ஒன்றியத் தலைவர் ஞா. பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்ஸாண்டர், மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் மஞ்சு குமாரதாஸ், கோட்டாறு பகுதித் தலைவர் ச. ச. மணிமேகலை, கழக தோழர் பெனடிக்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய மூடநம்பிக்கை ஒழிப்பு கருத்துக்கள் அடங்கிய நூல்கள் துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன,
