கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.10.2026

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* டில்லி மெட்ரோ சேவை முடக்கம்: உச்சநீதிமன்றத்தில் இன்று சிறப்பு விசாரணை: டெல்லி மெட்ரோ ரயில் சேவைகளை நிறுத்தக் கோரும் போராட்டம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறப்படும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று சிறப்பு விசாரணை நடத்துகிறது.

* மத்தியப் பிரதேச அரசு – ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தை அணுக திட்டம்: உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி இட ஒதுக்கீட்டை 27% ஆக உயர்த்தியதை தடை செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய பிரதேச பாஜக அரசு உச்சநீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* எலான் மஸ்க் – ரிலையன்ஸ் நிறுவன தொடர்புடைய பாஜக பிரசாரத்திற்கு நிதியுதவி குறித்த அறிக்கைகளை பகிர்வு: ரிலையன்ஸ் தொடர்புடைய நிறுவனம், பாஜகவின் சமூக ஊடகப் பிரசாரத்திற்கு பெரும் நிதியுதவி அளித்ததாக கூறும் செய்திகளை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்; இந்தக் குற்றச்சாட்டுகளை ரிலையன்ஸ் இதுவரை பொதுவாக மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.

* டில்லியில் சி.ஜே.பி. போராட்டம் தீவிரம் – தலைநகரில் பலத்த பாதுகாப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி சி.ஜே.பி. நடத்திய போராட்டத்தில் 7,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்; 35,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

* மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்; தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதாக அமைப்புகள் அறிவித்துள்ளன.

* எதிர்க்கட்சிகள் திங்கட்கிழமை முதல் போராட்டம் – மாணவர் அமைப்புகள் உறுதி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், தேர்தல் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை கண்டித்தும் எதிர்க்கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் திங்கட்கிழமை முதல் போராட்டங்களைத் தொடரத் திட்டமிட்டுள்ளன. கைது நடவடிக்கைகள், காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் தலைவர்களின் தடுப்புக் காவலுக்கு மத்தியில், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எகனாமிக் டைம்ஸ்:

* மத்தியப் பிரதேசத்தில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முடிவு: ஓபிசி இட ஒதுக்கீட்டை 14%-லிருந்து 27% ஆக உயர்த்தியதை ரத்து செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாஜக அரசின் சட்ட நடவடிக்கைகளை குற்றம்சாட்டிய காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 27% ஓபிசி இட ஒதுக்கீடு ரத்து: ஓபிசி முதலமைச்சர்களை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம்: மத்தியப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக நான்கு ஓபிசி தலைவர்கள் முதலமைச்சர்களாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை 14%-லிருந்து 27% ஆக உயர்த்துவதற்குப் போதிய சிறப்புச் சூழல்கள் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்தது. ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு பெறும் உரிமை உண்டு என்றாலும், அதை 27% ஆக உயர்த்துவதற்கு சட்டரீதியான அடிப்படை இல்லை என நீதிமன்றம் கூறியது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சாயம் வெளுக்கும் குஜராத் மாடல்: குஜராத்தில் ஆய்வு செய்யப்பட்ட பெண்களில் 27.4% பேருக்கு மட்டுமே மகப்பேறு (PMMVY) நிதியுதவி!: ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 70.2% பேர் பிரதமரின் மகப்பேறு வந்தன யோஜனா (PMMVY) திட்டத்தை அறிந்திருந்தாலும், 27.4% பேருக்கு மட்டுமே நிதியுதவி கிடைத்துள்ளது. 66.9% பெண்கள் எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்; மகப்பேறு நலத்திட்டப் பயன்கள் சென்றடைவதில் பெரும் இடைவெளி இருப்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது.

தி இந்து:

* தனியார் நிறுவனங்கள் விண்ணப்ப படிவங்களில் ஜாதி விவரங்களைக் கோர கட்டாயப்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம்: தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்களும் தனியார் வேலை வழங்குநர்களும் விண்ணப்ப படிவங்களில் ஜாதி அல்லது சமூக விவரங்களைக் கட்டாயமாகக் கோரக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சட்ட விதிகளின்படி குறிப்பாகத் தேவைப்படும் சூழல்களைத் தவிர, இத்தகைய விவரங்களைக் கட்டாயமாகப் பெறுவதைத் தடை செய்யக் கோரிய பொதுநல வழக்கை விசாரித்த அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* டெல்லி முழுவதும் முடக்கம்; மாணவர்கள் மீது காவல்துறையும் பாஜக குண்டர்களும் தாக்குதல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு: சென்னையில் நடைபெற்ற மாணவர்களின் குரல் (‘சாத்ரோன் கி கூஞ்ச்’) நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, டெல்லியில் இணையச் சேவை முடக்கப்பட்டதுடன், மாணவர்கள் மீது காவல்துறையினரும் பாஜகவின் குண்டர்கள் எனக் கூறப்படுவோரும் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார். மாணவர்களின் குரல்கள் ஒடுக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், டில்லியில் நடைபெற்ற சம்பவங்களை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகச் சாடினார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *