வடச்சேரி, அக். 11- திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தீ.வ.ஞானசிகாமணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தீ.வ.இன்பமூர்த்தி, தீ.வ.சரவணன் ஆகியோரின் சகோதரரும், வசந்தா அவர்களின் வாழ்விணையரும் உ.கதிரவன் உ.கனிமொழி ஆகியோரின் தந்தையார் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரி தீ. வ.உலகநாதன் உடல் நலக்குறைவால் 08-10-2026 அன்று மாலை மறைவுற்றார்
படத்திறப்பு இரங்கல் கூட்டம்
10-10-2026 அன்று காலை 9:30 மணி அளவில் வடசேரி மறைந்த உலகநாதன் அவர்களின் படத்திறப்பு மற்றும் இரங்கல் கூட்டம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் தலைமையேற்று இரங்கல் உரை ஆற்றினார்
கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மறைந்த உலக நாதன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து உலகநாதன் அவர்களின் இயக்கப் பணி அரசுக் பணி கொள்கைப் பற்று ஞானசிகாமணி அவர்களின் குடும்பத்தின் இயக்கப் பணி களும் பற்றி நினைவு கூர்ந்தார்
உலகநாதன் அவர்களுடைய பணிகள் குறித்து பெரியார் பெருந்தொண்டர் முத்து. ராஜேந்திரன் அறிமுக உரை யாற்றினார்
மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் தியாக.இளங்கோவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் திராவிட. கதிரவன், வழக்குரைஞர் கணேசன் வடசேரி ரவிச்சந்திரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்
ஊராட்சி மன்றத் தலைவர் நந்தகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன், ஒரத்த நாடு தெற்கு ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம், ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், ஒரத்தநாடு நகரச் செயலாளர் பு.செந்தில் குமார், கழகச் சொற்பொழிவாளர் இரா, பெரியார் செல்வன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.ராமகிருஷ்ணன் திருவோணம் ஒன்றியத் தலைவர் சாமி.அர சிலங்கோ, மன்னை மாவட்ட துணைத் தலைவர் இன்பக்கடல், தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாநகர துணைத் தலைவர் அ.டேவிட், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் கு.நேரு, ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் ச.பிரபாகரன், பொறியாளர் பாலகிருஷ்ணன், புதுவளவு மெய்யழகன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் வெ.துரை, நல்லிக்கோட்டை நல்ல தம்பி, குணசேகரன் வடசேரித் தோழர்கள் சந்திர சேகரன், ராமசாமி, எம்.பி. சரவணன், ஆறுமுகம், இளங்கோ, மதுக்கூர் சிவஞானம், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் இ.அல்லி ராணி, சுமித்ரா, தீபன், கதிரவன், தம்பி பிரபாகரன் உள்ளிட்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இறுதி மரியாதை செலுத்தினர் எந்தவித மூடச் சடங்குகளும் இன்றி மறைந்த உலகநாதன் அவர்களின் உடல் எரியூட்டப்பட்டது.
