கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கொலைக் குற்றங்கள் குறைவு காவல்துறை தலைமை இயக்குநர் தகவல்
சென்னை, ஏப். 25 தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 24.4.2025 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:…
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு காலை சிற்றுண்டி திட்டத்தை 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.25 காலை சிற்றுண்டி திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வலியுறுத் தினர். சட்டப்பேரவையில் நேற்று (24.4.2025) பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அப்போது…
கழகக் களத்தில்…!
27.4.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு: மாலை 5.00 மணி * இடம்: திருவள்ளுவர் மன்றம், (பழனி அய்யா இல்லம்), 464, சேரன் தெரு, இணைவு 1, மறைமலைநகர். * பொருள்: கழக வளர்ச்சி பணிகள் *தலைமை:…
நன்கொடை
தி.மு.க. ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினரும், அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவருமான அரூர் ராஜேந்திரன், தமிழர் தலைவரைச் சந்தித்து நன்கொடை வழங்கினார். உடன்: ஊமை.ஜெயராமன் (24.4.2025, சென்னை).
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *பஹல்காமில் “பாதுகாப்பு குறைபாடு” - அனைத்துக் கட்சி கூட்டத்தில் சூசகமாக சுட்டிக்காட்டிய ஒன்றிய அரசு; பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் உறுதி! கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
பெரியார் விடுக்கும் வினா! (1629)
மனிதர்களே, ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக் கற்பிக்கப்பட்ட, புகுத்தப்பட்ட கடவுளை நம்பி அறிவின் பயனைக் கெடுத்துக் கொண்டு கவலைக்கும், துக்கத்திற்கும் ஆளாகி அழிவது ஏன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! கேரளத்தில் சுயமரியாதை இயக்கம்
கேரளம் என்பது மலையாள நாட்டைக் குறிப்பிடுவதாகும். மலையாளநாடு என்பது திருவாங்கூர் ராஜ்யத்தையும், கொச்சி ராஜ்யத்தை பிரிட்டிஷில் மலையாள ஜில்லாவையும் சேர்த்து குறிப்பிடுவதாகும். இவற்றுள் நமது சுயமரியாதை இயக்கமானது எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றது என்பதை விளக்கவே இதை எழுதுகின்றோம். சுதேச சமஸ்தானங்கள் கொச்சி,…
மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு புதிய சாதனை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
சென்னை, ஏப்.25 கடந்த 2024-2–025-ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மி்ன்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. மின்னணு பொருட்கள் கடந்த 2023-2024ஆம் நிதி ஆண்டில், தமிழகத்தின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி…
உலக மலேரியா நாள் இன்று மலேரியாவை ஒழிக்க இலக்கு நிர்ணயம் அதிகாரிகள் தகவல்
சென்னை, ஏப். 25- 'மலேரியா நோயால், கடந்த ஆண்டு 347 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்குள் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உலக மலேரியா நாள் இன்று (25.4.2025) கடைப்பிடிக்கப்படும்…
கிராம நியாய விலைக் கடைகளில் கட்டுனர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (24.4.2025) கேள்வி நேரத்தின்போது கங்கவல்லி எம். எல்.ஏ. நல்லத்தம்பி, கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேட்டார். மேலும் நியாயவிலைக் கடையில் கைரேகை மூலம் பொருட்கள்…
