இயக்கவாதி புரட்சிக் கவிஞர்! கவிஞர் கலி.பூங்குன்றன்
பாரதிதாசன் என்றால் அவர் ஒரு கவிஞர் பெரியார் பற்றாளர் பகுத்தறிவாளர் என்கிற அளவில் தான் நம் கழகத் தோழர்கள் உள்பட பலராலும் பொதுவாக அறியப்பட்டுள்ளார். அதையும் தாண்டி அவர் ஓர் இயக்கவாதியாக கருஞ்சட்டைத் தளபதியாக திராவிடர் கழகச் சீரிய போர்வாளாக இருந்தார்…
‘முரசொலி’ செல்வத்தின் ‘சிலந்தி’ கட்டுரைகள் நூலினை மூத்த அமைச்சர் துரைமுருகன் வெளியிட, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்!
‘முரசொலி’ செல்வம் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, ஏப்.25 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, ‘முரசொலி’ வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் ‘முரசொலி’ செல்வத்தின் சிலையை திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை! ‘‘நான் முதல்வன்’’ திட்டத்திற்கு முன்பும் – பின்பும்! வெற்றிப் படிக்கட்டில் முதலிடத்தில் நிற்கும் தமிழ்நாடு!
சென்னை, ஏப்.25– ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சியில் ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் காரணமாக யு.பி.எஸ்.சி. தேர்வில், தமிழ்நாட்டு இருபால் மாணவர்கள் பெற்ற பலனும், வெற்றியும் அபரீதமானது. “நான் முதல்வன் திட்டம்’’, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையில் தமிழ்நாடு மாணவர்களின் …
இந்நாள் – அந்நாள்
டாக்டர் மு. வரதராசனார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 25, 1912) டாக்டர் மு. வரதராசனார் 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.…
‘காஷ்மீர் மக்களை எதிரிகளாக நினைக்காதீர்கள்!’ மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா உருக்கம்
சிறீநகர், ஏப்.25 காஷ்மீர் மக்களை எதிரி களாக கருத வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேண்டு கோள் விடுத்துள்ளார். காஷ்மீரின் பஹல்கா மில் கடந்த 22ஆம் தேதி நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு…
தமிழ் வாரம் : தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமெரிக்காவின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நன்றி!
திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும் ஆகச்சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமையாகவும் விளங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஏப். 29ஆம் நாளை உலகத் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ்மன்றம்-அமெரிக்கா இலெமுரியா அறக்கட்டளை-மும்பை, கருநாடக மாநில தமிழ்ப் பத்திரிகையாளர்…
முடிவுக்கு வருகிறது அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்!
வாசிங்டன், ஏப்.25 சீனாவுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு சீனாவும் விடுத்துள்ள பதிலடி வரிகள் காரணமாக பன்னாட்டு அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சீனா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப் படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதனால் விரைவில் அமெரிக்கா-சீனா இடையேயான…
உலகின் தனித்த புத்தகப் புரட்சி இதோ! (2)
தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ ஏட்டில், அவரால் எழுதப்பட்டு வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து சிறு சிறு வெளியீடுகளாக வெளியிடவும், மற்றவர்கள் எழுதிய முக்கிய சிந்தனைப் புரட்சிக்கான கட்டுரைகளையும் வெளியிடவும் ‘குடிஅரசு’ப் பதிப்பகம் என்பதையும் தனது சொந்த பொருட் செலவினைப் பொருட்படுத்தாது நிறுவி,…
‘புலே’ திரைப்படத்தில் தணிக்கைக் கத்தரிக்கோல்!
‘‘சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாற்றை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் புலே. இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தின் பல காட்சிகளுக்கு…
சுயமரியாதையை காக்க
படுக்கையில் இருந்து எழும்போது, இன்று உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாத நாளை வீணாய்ப் போனதாகவும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள். உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக் கொடுக்கும் பாக்கியத்தை அடையத் 'தபசு' இருங்கள்.…
