நிலநடுக்க இடிபாடுகளில் 24 மணிநேரத்திற்கும் மேலாக சிக்கி உயிர் பிழைத்த குழந்தை

1 Min Read

காரகாஸ், ஜூன் 28– வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி, பிறந்து 18 நாளேயான குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த 24.6.2026 அன்று மாலையில் ஒரு நிமிட இடைவெளியில், அடுத் தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒரு நூற்றாண் டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் குலுங்கின.

2ஆவது நிலநடுக்கம்

ரிக்டர் அளவுகோலில் முதலில் 7.1 என்ற அள விலும், பின்னர் 7.5 என்ற அளவிலும் இரு நிலநடுக்கங்கள் கடுமையாக தாக்கின. 2ஆவது நில நடுக்கம் நிலப்பரப்பின் மேற்பகுதிக்கு அருகே (10 கி.மீ. ஆழம்) ஏற்பட்டது பெரும் பாதிப்புக்கான காரணியாகி விட்டது. இதனால், தலைநகர் காரகாஸ் உள்பட பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கட்டடங்கள் தரை மட்டமானதில், ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பாகி உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்தும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் காணாமல் போயுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

உயிர்தப்பிய குழந்தை

இந்த கட்டட இடிபாடு களில் 24 மணிநேரத்திற்கும் மேலாக சிக்கிக்கொண்ட, பிறந்து 18 நாட்களேயான குழந்தை ஒன்று, உயிர் தப்பிய வியப்பிற்குரிய நிகழ்வு நடந்துள்ளது. மீட்பு குழுவினர் தொடர்ந்து நடத்திய தேடுதல் மற்றும் மீட்பு பணியில், அந்த குழந்தையை கண்டறிந்தனர்.

இதன்பின்பு குழந்தையை மீட்டு அதன் தந்தையிடம் ஒப் படைத்தனர். அதனுடன் நில்லாமல், தொடர்ந்து இடிபாடுகளை மீட்பு குழுவினர் அகற்றினர். இதில், ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் குழந்தையின் தாயாரும் மீட்கப்பட்டார். அவர்கள் இருவரும் உடல்நலத்துடன் உள்ளனர். குழந்தையை மீட்கும் காட்சிப்பதிவு வைரலாகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *