திருச்சி, ஜூன் 28- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 21.06.26 அன்று நடைபெற்ற சிலம்பம் பேரணியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு எம். பிக்ஷிதா மற்றும் 12ஆம் வகுப்பு ஜெ. சிறீஷா ஆகிய இரண்டு மாணவிகள் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர்.

பாரத சாரண சாரணியர்களுக் கான ஆளுநர் விருது முகாமில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பி.தேவதர்ஷினி, ஆர். சிவானியா மற்றும் ஆர். ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் மிகச்சிறப்பாக பங்குப் பெற்று ஆளுநர் விருதிற்கான சான்றி தழைப் பெற்றனர்.

2025-2026ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற இளைஞர் செஞ்சிலுவை சங்கம் முகாமில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 20பேர் கலந்து கொண்டு சிறந்த மாணவிகளுக்கான சான்றிதழை பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
பாராட்டு
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
