கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.7.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பீகாரில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில், ஓவைசி, ஆசாத், பிரசாந்த் கிஷோர் ஆகியோர் தலைமையில் உள்ள சிறிய கட்சிகளால் பிரியும் வாக்குகள்; அதன் காரணமாக என்.டி.ஏ, இந்தியா கூட்டணி போடும் வெற்றிக் கணக்கு பாதிக்கலாம் என்கிறார்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1695)
நம் மக்களுக்குக் கல்வி கற்பதில் இலட்சியம் என்றொன்று உண்டா? யார் எதைப் படிக்க வேண்டும், படித்த படிப்பு எதற்குப் பயன்படும் என்கிற ஒரு யோசனை பெற்றோர்களுக்கு உண்டா? படிப்பு என்பது, எதையோ படிப்பதும், படிப்பு வரக்கூடிய பிள்ளையாயிருந்தால் படித்துக் கொண்டே போவதும்,…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் பதவியேற்பு!
திருச்சி, ஜூலை 5- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர் களுக்கான பதவியேற்பு விழா 2.7.2024 (புதன்கிழமை) மதியம் 1.00 மணியளவில் பள்ளியின் நாகம்மையார் கலையரங்கத்தில் நடைபெற்றது. எஸ்.காட்வின் மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்குப்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (6)
இரண்டாவது மாகான சுயமரியாதை மகாநாடு – I (ஈரோடு) இம்மாதம் 10, 11, 12, 13 தேதிகளில் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மகாநாடும் அதை அனுசரித்து வாலிபர் மகாநாடு, பெண்கள் மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு ஆகிய அய்ந்து மகாநாடுகள்…
இப்படியா கடவுள் பேரால்? 13.11.1948 – குடி அரசிலிருந்து…
கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன.…
போன மச்சான் திரும்பி வந்தார்!
வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே திராவிட இனத்தைச்…
மக்களை திசை திருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 5- பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டாபர் நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக விளம்பரங் களை வெளியிட்டு வந்தது. டாபர் நிறுவனத்தின் தயாரிப்பை இழிவுபடுத்தும் வகையிலும்,…
ரூபாய் 8 ஆயிரம் கோடியில் சென்னை துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் புதிய முனையம் அமைக்க திட்டம் – துறைமுகத் தலைவர் தகவல்
சென்னை, ஜூலை 5- சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் ரூ.8 ஆயிரம் கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் இந்திய மல்டி மாடல் போக்குவரத்து ஆபரேட்டர்கள் சங்கம்…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நாட்டில் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு முறையை ஒன்றிய அரசு நடைமுறைக்கு பரிசீலிப்பது சரியானதா? - இரா.முல்லைக்கோ, பெங்களூரு பதில் 1: தவறு, மிகப் பெரிய தவறு. மனுதர்மப்படி, ‘விவசாயம்’ பாவகரமான தொழில் அல்லவா?…
