கடவுள் சக்தியை நம்பும் பக்தர்களுக்கு காணிக்கை! கேரளாவில் மேலும் ஒரு கோயிலில் தங்கம் காணவில்லையாம்!
திருவனந்தபுரம், அக்.15- சபரி மலையைத் தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் காணாமல் போனது அம்ப லமாகி உள்ளது. சபரிமலை சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான முகப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. …
கருநாடக மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை
பெங்களுரு, அக். 15- தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கருநாடகா வில் உள்ள அரசுக் கட்டடங் களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி களுக்கு தடை விதிக்க வேண் டும் என முதலமைச்சர் சித்தரா மையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து…
உயர்ந்த பொறுப்புகளில் இருந்தாலும், நம்மைக் ‘கீழ்ஜாதிக்காரர்களாகப்’ பார்ப்பதுதான் ஸநாதனம்!
*செருப்பு வீசும் ஸநாதனவாதிகள்! *கடவுள்தான் செருப்பு வீசச் சொன்னாராம்! *ஸநாதனத்திற்கும் – சமூகநீதிக்குமிடையிலான போர்! ஸநாதனத்திற்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்பதற்கே இந்த மிரட்டல்! ‘‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதைப் பாரீர்!’’…
நீதிபதி நியமனத்திலும் சமூகநீதி தேவை – தேவையே!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களை இலக்காகக் கொண்டு அரங்கேறும் நிகழ்வுகள், நமது நாட்டின் அரசியல் சாசன நிறுவனங்களின் மீதும், குறிப்பாக நீதித்துறையின் மீதும், ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. அவர் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து…
வகுப்புரிமை
சமுதாய எண்ணிக்கைக்கு உள்ள விகிதாசார உத்தியோகங்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு சட்டத்தில் குறிப்பிட்டாக வேண்டுமேயொழிய ஆட்சிக்கு வருகிறவர்கள் தயவைப் பொறுத்ததாக இருக்கக்கூடாது. (குடிஅரசு, 25.8.1940)
தி.இரா.இரத்தினசாமி மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், தாம்பரம் மாவட்ட கழகக் காப்பாளருமான தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களின் மறைவையொட்டி இன்று (14.10.2025) காலை 10:30 மணிக்கு சேலையூர் அன்னை இந்திரா நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்த மூவருக்கு நோபல் பரிசுகள்!
உலகின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மனித குல வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு துறைகளில் பங்களிப்பாற்றிய சாதனையாளர்கள் மற்றும் முன்னோடிகளை சிறப்பிப்பதே இந்த நோபல் பரிசின் நோக்கமாகும். அதன்படி 1901ஆம் ஆண்டு முதல் இந்த நோபல்…
தமிழ்நாட்டில் 19ஆம் தேதி வரை மழை தொடரும் வானிலை மய்யம் தகவல்
சென்னை,அக்.14 தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை…
சாலைப் பயணங்களில் விபத்து இல்லாத தமிழ்நாடு என்பதே முதலமைச்சரின் கனவு அமைச்சர் எ.வ. வேலு பேச்சு
சென்னை, அக்.14- 'பள்ளமில்லா சாலைகள்', 'பாதுகாப்பான பயணம்', 'விபத்தில்லா 'தமிழ்நாடு' என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத்துறையை வழிநடத்திச் செல்வதே முதலமைச்சரின் கனவாகும்' என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார். பள்ளமில்லா சாலை சென்னை கிண்டியில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஆணைய கூட்டரங்கில், வட…
நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தன் பாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, அக்.14 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- விடுதலைப் போராட்ட வீரர் - மொழிப்போர்த் தீரர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் பெயரன், விடுதலைப் போராட்டத் தியாகிகள் கிருஷ்ணசாமி பாரதி, லட்சுமி பாரதி ஆகியோரின் மகன் என…
