அறிஞர் அண்ணாவின் நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்திடுவீர்! சட்டப் பேரவையில் ஆயிரம் விளக்கு நா.எழிலன் வலியுறுத்தல்!
சென்னை, அக்.19– சட்டப் பேரவையில், கேள்வி நேரத்தின்போது, ஆயிரம் விளக்கு தொகுதி கழக உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன், “அறிஞர் அண்ணா அவர்களின் நூல்களை பிறமொழிகளில் மொழி பெயர்க்க அரசு ஆவன செய்ய வேண்டும்!” எனக் கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில்…
நாவலர் – செழியன் அறக்கட்டளை
நாவலர் - செழியன் அறக்கட்டளையும், விஅய்டி பல்கலைக்கழகத்தின் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து நடத்தும் தந்தை பெரியார், அண்ணா நினைவுச் சொற்பொழிவின் அழைப்பிதழை வி.அய்.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வழங்கினார்.
தமிழர் விழாவா தீபாவளி? விழிப்புணர்வு துண்டறிக்கைப் பிரச்சாரம்
தமிழர் விழாவா தீபாவளி? தமிழர்களுக்கு எதிரான, அறிவுக்குப் பொருந்தாத ஆரியப் பண்டிகையான தீபாவளியை தமிழர்களே கொண்டாடாதீர்! என விழிப்புணர்வுத் துண்டறிக்கையை நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நாகை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் வழங்கி…
தமிழவேள் மு. கண்ணபிரான் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் நேரில் மரியாதை
தானும் கல்வி சிறந்து, சமூகமும் கல்வி சிறக்கக் கல்விக் கொடை நல்கிய தகைமைப் பண்பாளர் மு. கண்ணபிரான் 17.10.2025 அன்று மறைவுற்றார். அமெரிக்காவில் உள்ள தோழர் ரவிசங்கர் அவர்களின் தந்தையார் ஆவார். செய்தியறிந்தவுடன் அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு கழகத்…
கழகத் தோழர்களின் மனிதநேயச் செயல்பாடு
எனது குடும்ப உறவினரின் நண்பர் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து போடிநாயக்கனூர் வருவதற்காக வேளாங்கண்ணி சென்று விட்டு நாகப்பட்டினம்வழியாக வருகின்றபோது என் நண்பருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அவரது துணைவியார் சேர்ந்திருக்கின்றார் அந்த ஊரில் அவர்களுக்கு யாரும் தெரியாது. உடன்…
சிற்றூர் தையல்நாயகி அம்மையார் மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை
அரியலூர், அக். 19- அரியலூர் மாவட்டம். செந்துறை வட்டம். நிண்ணியூர் சிற்றூரைச் சார்ந்த மறைந்த சாமிநாதனுடைய வாழ்விணையரும் இராசாத்தி, செந்துறை இராஜேந்திரன், இராஜாகோபால், இராதா, வழக்குரைஞர் பகுத்தறிவாளன், விஞ்ஞானி தங்கசாமி, மருந்தாளுநர் செந்தாமரை ஆகியோரின் தாயாருமான தையல்நாயகி அம்மையார் (வயது 86) …
அதிக செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலைத் தகவல் துல்லியமாகக் கிடைக்கிறது இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
திருநெல்வேலி, அக்.19- அதிக செயற்கைகோள்களை அனுப்பி உள்ளதால், வானிலை குறித்த தகவல்களை மிகத் துல்லியமாக, முன்கூட்டியே பெற முடிகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் நாராயணன் கூறினார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில்…
வீரவணக்கம்! வீரவணக்கம்
தஞ்சை மாவட்ட கட்டடத் தொழிலாளரணி செயலாளர் மு.ரமேஷ் தந்தையும், திராவிடர் கழக மாத்தூர் கிளைக்கழக தலைவருமான, பெரியார் பெருந்தொண்டர் நா.முனியப்பன் அவர்கள் 18-10-2025 மதியம் மறைவுற்றார். இன்று 19-10-2025 மதியம் 12 மணியளவில் மாத்தூர் காமன் கோவில் தெரு அவரது இல்லத்திலிருந்து…
விமானத்தில் வழங்கிய உணவில் முடி! பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக்.19- இலங்கையில் இருந்து கடந்த சில மாதங்களுக்குமுன் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பயணிக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் தலைமுடி இருந்துள்ளது. இதுகுறித்து விமான ஊழியர்களிடம் அந்த பயணி முறையிட்டுள்ளார்.…
