வாகனப் பரப்புரைக் குழுவினரை எழுச்சியுடன் வரவேற்று நிறைவுப் பொதுக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்திடுவோம் பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
பட்டுக்கோட்டை, ஜூலை 26- ‘‘நீட்" தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி வருகை தரும் வாகனப்பரப்புரை குழுவினரை எழுச்சியுடன் வரவேற்று நிறைவு பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்திட பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.…
“நீட்”, EWS ரத்து செய்ய வலியுறுத்தி வருகை தரும் வாகனப் பரப்புரைக் குழுவினரை எழுச்சியுடன் வரவேற்பது என தஞ்சை மாநகர திருவையாறு ஒன்றியக் கலந்துரையாடலில் முடிவு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்றுச் சிறப்புரை
திருவையாறு, ஜூலை 26- தஞ்சாவூர் மாநகர, திருவையாறு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 23-07-20226 அன்று மாலை 6.30 மணி அளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன் கடவுள் மறுப்புக் கூறினார்.…
வெறும் பேச்சு மட்டுமே குற்றமாகாது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூலை 26- வெறும் பேச்சு மட்டுமே குற்றமாகாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குரைஞர் சு.குமார தேவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட் டுள்ளது. கடந்த 2016ஆம்…
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆளுநர் மாளிகையின் உத்தரவுக்கு மேனாள் பேரவைத் தலைவர் அப்பாவு கடும் கண்டனம்!
நெல்லை, ஜூலை 26- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது தொடர்பான ஆளுநர் மாளிகையின் உத்தரவுக்கு, தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப்…
‘நீட்’ முறைகேடு: தர்மேந்திர பிரதான் பதவி விலகல் பாஜக பின்னடைவின் துவக்கம்
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை சென்னை, ஜூலை 26–- ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது, பாஜக அரசின் பின்னடைவுக்கான துவக்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மீண்டும் நிராகரிப்பு: ஒன்றிய அரசு
டில்லி, ஜூலை 26- கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்பிய பரிந்துரையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் இத்திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தயாரித்து, ஒப்புதலுக்காக ஒன்றிய…
இந்தியாவில் மாணவர்கள் மீதான தாக்குதல் அய்க்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!
புதுடில்லி, ஜூலை 26- இந்தியாவில் ஒன்றிய அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அய்க்கிய நாடுகள் சபை (UN) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. போராட்டக்காரர்கள் மீதான வன்முறைகள்…
நீட் ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்! அமைச்சர் வன்னி அரசு அதிரடி பேச்சு!
ரிஷிவந்தியம், ஜூலை 26- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதாது; ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டிற்கும் பொறுப்பேற்றுப் பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று சமூக…
ஆளும் கட்சி ஆதரவுப் போக்கு வீழ்ச்சியில் முன்னணி ஊடகங்கள்… மாற்று ஊடகங்களை நோக்கி நகரும் இளைஞர்கள்!
புதுடில்லி, ஜூலை 26- மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் முன்னணி செய்தித் தொலைக்காட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதும், அதன் விளைவாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கத் திட்டமிட்டுள்ளதும் ஊடக உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடாப் போர் பதற்றம் மற்றும்…
‘நீட்’ முறைகேடு விவகாரம் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்! போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வாழ்த்து!
சென்னை, ஜூலை 26–- தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, டில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய…
நன்கொடை
மதுக்கூர் ஒன்றிய மேனாள் துணைச் செயலாளர் பெ.உத்திராபதியின் 10ஆம் ஆண்டு நினைவுநாளை (27.7.2026) முன்னிட்டு நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 அவர்களின் குடும்பத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.
கழகக் களத்தில்…!
27.07.2026 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு 1105 நன்னிலம் முனைவர் சு.ஆறுமுகம் நூல்கள் வெளியீட்டு விழா சென்னை: மாலை 5.00 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) தலைமை *…
