இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்
துத்தநாகம்: வெள்ளை குருதி (இரத்த) அணுக்களின் ஒரு முக்கிய அங்கமான இது தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. துத்தநாகம் இல்லாததால் சளி, காய்ச்சல் மற்றும் பிற வைரஸ் தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அப்படியானால், குறிப்பாக வயதானவர்களுக்கு, துத்தநாக சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது…
பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள்
அண்மைக் காலமாக பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போதையை காலத்தில் மகிழுந்து எனும் கார் வைத்திருப்பது நம்மிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் அனைவரும் இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது காலத்தின் கட்டாயமாகவும் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும்…
இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!
காத்மாண்டு, ஜூலை 27- இந்தியாவின் புதிய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாள அரசு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி ஒன்றிய அரசு, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை…
பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரா்கள்!
பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு 3 விண்வெளி வீரா்கள் 26.7.2026 அன்று பாதுகாப்பாகத் திரும்பினா். விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக சோ்ந்து பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. அந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்க விண்வெளி வீரா் கிறிஸ் வில்லியம்ஸ்,…
மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் 7 முறை சுட்ட அதிரடிப் படை வீரர் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
புதுடில்லி, ஜூலை 27- நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்ட பேரணியின் போது, ஒன்றிய தீவிர அதிரடிப் படையைச் சேர்ந்த வீரர் பெல்லட் துப்பாக்கியால் குறைந்த பட்சம் 7 முறை சுட்டுள்ளார் என்றும், அதில் 5 குண்டுகள்…
ஆரம்பித்து விட்டார்கள் கலவரத்தை மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்! தமிழ்நாடு பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!
ஓசூர், ஜூலை 27- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலி யுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், கருநாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து…
தமிழ்நாட்டின் நம்பகமான கல்விக் கட்டமைப்பைச் சிதைத்த ‘நீட்’ தேர்வு முறை! ஒன்றிய அரசு மீது கடுமையான விமர்சனம்!
சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டு களாக 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கல்வித் துறை அதிகாரிகளாலும், பள்ளித் தலைமை ஆசிரியர்களாலும் மிகவும் கட்டுக்கோப்பாகவும் நேர்மை யாகவும் நடத்தப்பட்டு வந்தன. இரும்புத் திரை எப்பேர்ப்பட்ட செல்வாக்கு படைத்த வர்களாலும்,…
வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்! ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!
வேலூர், ஜூலை 27- வேலூர் விமான நிலையத்துக்கான பணிகள் ஏறக்குறைய முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், அதனை விரைவில் மக்கள் பயன் பாட்டுக்குத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். வேலூர் சங்கரன்பாளையம் பகுதியில்…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர்
பெரியாருடைய கொள்கை ஒருபால் பட்டது அல்ல; எல்லா மக்களுக்குமானது! மானுடத்தினுடைய எல்லைக்கு விரிவடையக் கூடியது பெரியாரின் வெற்றி! களைகள் வளர்கின்றன என்பதற்காகப் பயிரை அழித்து விட முடியாது; பயிர் நிச்சயமாக அதனுடைய விளைவுகளைத் தரும்; நல்ல அறுவடை தரும்! சிங்கப்பூர், ஜூலை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் அரசு நிறுத்தியதை அடுத்து, ஈரானும் தாக்குதலை நிறுத்தியுள்ளது. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தேர்தல் அரசியலில் இருந்து விலகினார் கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா! இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மாணவர்கள்…
இதுதான் பக்தியா?
சென்னை கொரட்டூரில் உள்ள ஓம் சக்தி நாகவல்லி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அலகு குத்திக் கொண்டும், காவடி எடுத்தும், உடலில் மிளகாய் சாந்து கரைசலை ஊற்றிக் கொள்ளும் நேர்த்திக்கடனாம்!
தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் மவுனமாக இருப்பது ஏன்? ஏன்?
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாகத் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும் என்ற அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? ஆளுநர்…
