புதுடில்லியில் சந்திப்பு! தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கோரிக்கை மனு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – பிரதமர் மோடியிடம் வழங்கினார்!
புதுடில்லி, மே 25– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார். புதுடில்லியில் நேற்று (24.5.2025) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர்…
டில்லியில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 23 ஆக உயர்வு
புதுடில்லி, மே 25- நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டில்லியில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. டில்லியில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் படி அனைத்து…
கடவுள் சக்தி எங்கே? திருமங்கலத்தில் சாமி சிலைகள் உடைப்பு
திருமங்கலம், மே 25- மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட குதிரைச்சாரிபுரம், பழனியாபுரத்தில், ஏழு பேர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அய்யர் சாமி, பெரிய கருப்புசாமி, சன்னாசி, மாயாண்டி, ராக்காச்சி அம்மன், சின்னச்சாமி, ஆண்டி சாமி என, 20க்கும்…
மதச்சார்பின்மை மீதான உறுதிப்பாடு மேலும் வலுப்பெறட்டும் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, மே 25- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- கேரள முதலமைச்சரும், எனது அன்புத் தோழருமான பினராயி விஜயன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முற்போக்கான அரசு நிர்வாகத்தின் மீதான தங்களது அர்ப்பணிப்பும், கூட்டாட்சியியல் மற்றும் மதச்சார்பின்மை…
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை, மே 25- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 55 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 20 ஆயிரத்து 600 இடங்கள் உள்ளன. இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி…
சென்னை மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு கரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது
சென்னை, மே 25- சென்னையில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது பொது இடங்களில் முகக்கவசம் டில்லி, கேரளா, கருநாடகா, குஜராத், மராட்டியம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில்…
‘பிரதம மந்திரியின்’ பயிற்சித் திட்டம் – முதல் இடத்தில் தமிழ்நாடு
சென்னை, மே 25- ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டபிரதம மந்திரியின் பயிற்சித் திட்டத்தில் பயன் பெறுபவர்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. நாடு முழுவதும் படித்து முடிக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தி.மு.க. சட்ட நடவடிக்கை எடுக்கும் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் பேட்டி
சென்னை, மே 25- அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தி.மு.க. சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று சட்டத்துறை செயலாளர் ஆர்.என்.இளங்கோ தெரிவித் துள்ளார். அதிகார வரம்பு மீறல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.…
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை! ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, மே 25- ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்யும் மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது. ஆன்லைனில் சட்ட விரோதமாக இயங்கும் சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல…
உலக தைராய்டு நாள் இன்று (மே 25)
தைராய்டு சுரப்பி என்பது உடலின் வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கம், வளர்ச்சி போன்ற இயல்பான செயல்பாடுகளுக்குப் பொறுப்பான மிக முக்கியமான உறுப்பு ஆகும். தைராய்டு சுரப்பி என்பது கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும், இது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனைன்…
