அதிகாரத்தை வென்ற ஜாதியம்: நந்தன் முதல் கார்கே வரை தீராத தீண்டாமைக் கொடுமைகள்!
மாட்டுத் தொழுவத்தில் சந்திப்பு பாணன் இந்தியச் சமூக அமைப்பில் ஜாதியம் மற்றும் தீண்டாமை என்பன அடித்தட்டு மக்களை மட்டுமல்லாது, அதிகாரத்திலும், புகழிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட தலைவர்களையும் கூட விட்டுவைக்கவில்லை என்பதை வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது. நந்தனார்…
இந்த ஜாதி – மத – மனுவாதத் திமிரை ஒழிக்காமல் ‘சுதந்திர’ நாடு என்றால் ஏற்க முடியுமா?
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குத் தீண்டாமைக் கொடுமையா? தீட்டுக்கழிக்க யாகமாம்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குத் தீண்டாமைக் கொடுமையா? இந்த ஜாதி - மத - மனுவாதத் திமிரை ஒழிக்காமல்…
ஒன்றிய அரசின் கனிம வளங்கள் திருத்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ரூ.3,200 கோடி வருவாய் இழப்பு!
சென்னை, ஆக.14 ஒன்றிய அரசின் கனிம வளங்கள் திருத்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ரூ.3,200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு – கனிமொழி எம்.பி., ஆகியோர் குற்றச்சாட்டியுள்ளனர். ஒரு மாநிலம் கொண்டிருக்கும் கனிம வளங்கள் மூலம்…
கல்வியின் தரம் மிகவும் மோசமானது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால்தான்!
அரசுப் பதவிகளிலும், இதர அரசமைப்புத் தந்த அமைப்புகளின் உயரிய பதவிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அமர்ந்த பிறகு தான் கல்வி யின் தரம் மிகவும் மோசமானது. தேர்வு முறைகேடு கட்டுக்கடங்காமல் சென்றது. நிலைமை மோசமான பிறகு தனது பழைய ஆட்களை அகற்றிவிட்டு மீண்டும்…
நாடாளுமன்றத்துக்கு ‘வந்தே மாதரம்’ பாட மட்டும் அமித் ஷா வந்தார் பிரியங்கா காந்தி விமர்சனம்
புதுடில்லி, ஆக.14 நாடாளுமன்றத்தின் கடைசி நாளில் ‘வந்தே மாதரம்’ பாடத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் கடைசி நாளான நேற்று (13.8.2026) காலை மக்களவைக்கு பிரதமர் நரேந்திர மோடியும்,…
பக்தி சொல்லிக் கொடுக்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இதுதானா? இது தேவ பூமியா? குப்பைக் காடா? கங்கை சாக்கடையானது
ஹரித்வார், ஆக. 14- உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்தில் கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காகச் சுமார் 5 கோடி பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று முன்தினம் (12.8.2026) சிவராத்திரி வழிபாட்டுடன் பயணம் நிறைவு…
ரூ.180 கோடியை வீணடித்த மோடி அரசு
புதுடில்லி, ஆக.14 2026ஆம்ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 அன்று தொடங்கியது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தக் கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீதான தாக்குதல், ராமன் கோவில் முறைகேடு போன்றவற்றிற்கு விளக்கம் மற்றும்…
உத்தரகாண்ட் சுரங்கத்தில் வெள்ளம் 7 பேர் பலி, 2 பேர் சிக்கி தவிப்பு
டேராடூன், ஆக. 14- உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் திடீரென வெள்ள நீர் புகுந்தது. மண் மற்றும் கற்களும் நீருடன் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், சுரங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 7 பேர் பலியாகினர். மேலும் 3…
இந்திய வரலாற்றில் முதன்முறையாக தனியார் நிறுவனத்தின் பெயரில் விரைவுத் தொடர் வண்டி
புதுடில்லி, ஆக.14- தனியார் பிராண்ட் பெயரில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டில் முதல்முறையாகத் தொடங்கப்பட உள்ளது. வணிக விளம்பரத்திற்காக நிறுவனங்களின் பெயர்களை விளம்பரத்துடன் ரயில்களை இயக்கும் நடைமுறை பல் வேறு உலக நாடுகளில் உள்ளது. இந்தியாவில் சில நிறுவ னங்கள்…
குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிச் செயலிகளில் பாலியல் விளம்பரங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கவிஞர் சல்மா கேள்வி
புதுடில்லி, ஆக. 14 குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கைப்பேசி செயலிகளில் Sexually Explicit விளம்பரங்கள் இடம்பெறுவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? இத்தகைய வெளிப்படையான உள்ளடக்கங்களுக்கு குழந்தைகள் ஆளாகாமல் தடுப்பதற்காக, Google Play Store, Apple App Store மற்றும் App Developers உள்ளிட்ட…
செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (3)
ஒரு முக்கிய உணவுப் பழக்கம், உணவை நாம் எடுத்துக் கொள்ளுவதில் – சத்துக்காக புரதத்தை – ‘Protein’ அதிகமாக சேர்ப்பது முக்கியம் என்றாலும் ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர்கள் அறிவுரைப்படி எப்படி அதை ஒழுங்குபடுத்துவது என்பதை அறிந்து, குறிப்பாக முதுமையாளர்களும் அக்கறையோடு கடைப்பிடித்தொழுக…
ஹிந்து ராஷ்டிரம் என்பது இதுதான்!
இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூரில் உள்ள அரசு சேத் ஆனந்திலால் போடார் செவித் திறனற் றோர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற் பட்ட காதுகேளாத, பேசமுடியாத மாணவர்கள், தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பேசவும், கேட்கவும் இயலாத…
