வெங்காய விலை அதிகரிப்பால் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 10- தமிழ்நாட்டில் அத்தியா வசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது.

சென்னை கோயம் பேட்டில் மொத்த விலையில் நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கும், சில்லறை விலையில் ரூ.70-க்கும் விற்கப்படுகிறது.

மேலும், ஆந்திரா வெங்காயம் கோயம் பேட்டில் மொத்த விலையில் ரூ.40-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெங்காயத்தை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ரேசன் கடைகள் வாயிலாக ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை 2 கட்டங்களாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 3ஆவது கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தேசிய நுகர்வோர் கூட்டுறவில் இருந்து தமிழ்நாடு அரசு கொள் முதல் செய்துள்ளது.

இந்த வெங்காயம் சென்னை, தண்டையார் பேட்டை சரக்கு ரயில் முனையத்துக்கு நேற்று (9.10.2026) வந்தடைந்தது. இதை கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் பார்வையிட்டு, ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *