மின் இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரிகள் அடிப்படை வசதிகளில் வேகம் காட்ட வேண்டாமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக்.10- மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரிகள், அதே வேகத்தை மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் காட்ட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சாஜூ அலெக்ஸ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் காலனியில் உள்ள சாலையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதேபோல, சாலையில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் ஒா்க் ஷாப் கடைகளும் செயல்படுகின்றன. எனவே, இவற்றை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமா்வு பிறப் பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்களை வசூலிக்கும் சென்னை மாநகராட்சி, மக்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அது அதிகாரிகளின் கடமை.

சொத்து வரி, மின் கட்டணம், உள்கட்டமைப்பு கட்டணம், கட்டட திட்ட அனுமதி கட்டணம் உள்பட பல்வேறு வகையான கட்டணங்கள் குறித்த காலத்தில் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரு சக்கர வாகனங்கள் செல்ல தரமான சாலைகள், ஆக்கிரமிப்புகள் இல்லாத நடைபாதைகள், பொது சுகாதாரத்துக்கான அடிப்படை வசதிகள் என சென்னையில் வசிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, இதுகுறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

மின் கட்டணத்தை குடிமக்கள் குறித்த காலத்தில் செலுத்தாவிடில், அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டிக்கின்றனா். அதே வேகத்தில் அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதைகள் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்பதிலும் காட்ட வேண்டும்.

முக்கியமான இடங்களைக் கண்டறிந்து, அதை ஆக்கிரமிப்புகள் இல்லாத வகையில் வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

பின்னா், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இல்லாத நடைபாதைகளை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் குறித்து சென்னை மாநகராட்சி இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *