அகவை 64 ஆண்டு காணும் அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து!
‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியின் நிறுவனத் தலைவரும், சிறந்த பெரியாரிய அம்பேத்கரிய ஆற்றலாளரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாசத்திற்குரிய அருமைச் சகோதரர் முனைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு இன்று (17.8.2026) 64ஆம் ஆண்டு பிறந்த நாள். மாணவப் பருவம் முதற்…
என்ன கொடுமையடா இது? ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் பெற்றவர்களில் 80 விழுக்காடு மாணவர்கள் இரண்டு முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதியவர்களாம்!
சென்னை, ஆக.17– அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 2, 3 மற்றும் 4-ஆவது முறையில் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஆவார்கள். மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில்,…
பூணூல் புத்தி
‘தினமலர்’ வார மலர் 16.8.2026 பகலில் மதிய உணவில் சிக்கன் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவதாகக் கூறும் ‘தினமலர்’ வார மலரில் மறைந்திருக்கும் பூணூல் தனம் புரிகிறதா? சிக்கனுக்குப் பதில் கடலை மிட்டாய் வழங்குவது என்பதை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. சிக்கன்…
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த மருத்துவர்கள் கோரிக்கை
சென்னை, ஆக. 17- அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தும் அறிவிப்பை சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில் வெளி யிட அரசு மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு. தலைவர் மருத்துவர்…
சிங்கப்பூர் தேசிய நாள் ‘SG61’ கொண்டாட்டம் – பெரியார் நடை (Periyar Walk) பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) துணைத் தலைவர் வீ. அன்புராஜ் பங்கேற்று வாழ்த்து!
சிங்கப்பூரின் 61ஆவது தேசிய நாளை முன்னிட்டு (16.8.2026) நேற்று காலை சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் நடை (Periyar Walk) மற்றும் தேசிய நாள் பற்றுறுதி எடுத்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மெர்லியன் பூங்காவில் காலை 7:30 மணிக்கு…
ஆளுநர் நிகழ்ச்சிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்!
தமிழ் மொழி வாழ்த்துக்கு முதலிடம் தந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கைக்குப் பாராட்டுகள்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை சுதந்திர தின விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலை முதலில் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளரின்…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் (காணொலி) ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தக ஆய்வுரை – முனைவர் சுபாஷினி
தமிழ்நாட்டிலிருந்து கடல் கடந்து சென்றவர்கள் உடல் உழைப்பால், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம், கடவுள், வேதம், சாஸ்திரம், புராணம் என்கிற விசயத்திற்காக அழுக்குப்படாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற பார்ப்பனர்களிடம் கொடுக்கின்றார்களே! அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தவேண்டும் என்பதே பெரியாரின்,…
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஆக.16 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து, சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான நீதி உரிமை கள் கூட்டமைப்பு…
‘வந்தே மாதரம்’ பாட திருச்சபைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு
கோஹிமா, ஆக.16 'வந்தே மாதரம் பாடல் பாடுவதை கட்டாயமாக்கும் எந்த உத்தரவும் கடும் எதிர்ப்புக்கு ரியது' என, நாகாலாந்து கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. ‘வந்தே மாதரம்’ இயற்றப் பட்டு 150 ஆண்டுகள் நிறைவ டைந்துள்ளது. இதையொட்டி, ‘அரசு மற்றும்…
ஜாதி பெயர்களைக் குறிப்பிடாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு முடிவு
புதுடில்லி, ஆக.16 ஜாதிவாரி கணக்கெ டுப்பின் போது வழங்கப்படும் கேள்வித்தாளில், ஜாதிப்பெயர்கள் இல்லாமல் கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதை மாற்றுமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தும் பணிகளை ஒன்றிய…
தமிழ்நாட்டை விட்டு ஆந்திரா செல்லும் கப்பல் கட்டும் தள நிறுவனம்!
சென்னை, ஆக.16 தூத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஒப்பந்தம் செய்த, 'மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்' நிறு வனத்தின் உயரதிகாரிகள், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவைச் சந்தித்து பேசியுள்ளனர். எனவே, அந்நிறுவனத்தின் முதலீடு, ஆந்திர மாநிலத்திற்குச் செல்வதாக தகவல் வெளியாகி…
பேத்திக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளியைத் தண்டித்த பாட்டி!
சத்தியமங்கலம், ஆக.16 கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் குண்டாங்கல் பாறை புத்தர் நகர் பகுதியில் நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற மாணிக்கம் (31) என்பவர், 4 வயது சிறுமியை பாட்டி வீட்டிற்கு அழைத்துச்…
