‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்ற எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்குப் பாராட்டு

ஓசூர், மே 19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒசூர் கிளையின் சார்பில் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றமைக்கு ஓட்டல் தமிழ்நாடு கூட்டரங்கில் எழுத்தாளர் கமலாலயன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சிவந்தி அருணாசலம், மனோன்மணி,எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஆடிட்டர் பாலசுந்தரம், சிபிஎம் கட்சி ஜெய ராமன், எழுத்தாளர் நாராயணி கண்ணகி, தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பாலகிருஷ் ணன்,வாழ்த்துரை வழங் கினர், இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பி னர்கள் அசெ.செல்வம், கோ.கண்மணி ஆகியோர் கலந்துகொண்டு பய னாடை போர்த்தி திரா விடர் கழக வெளியீடான மார்ஸ்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் என்ற நூலை வழங்கி தங்களது வாழ்த்துகள் தெரிவித்தனர்.

விருது பெற்ற எழுத் தாளர் தமிழ்செல்வன் தனது ஏற்புரையில், எனக்கு விருது பெற்ற மகிழ்ச்சியைவிட நூறு நபர்கள் சேர்ந்து நூல்கள் படிப்பு வட்டத்தை துவங்கி ஒரு நூலையே நூறு நபர்கள் படித்து அதைப்பற்றி விவாதம் நடத்துவதுதான் நான் பெருமையாக, மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றார்.இந் நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் சங்கம் நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் தந்தையார் திராவிடர் கழகத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *