பீகார், மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து ரயில் தீ விபத்துகள் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்

பாட்னா / போபால், மே 19- இந்தியாவில் கடந்த இரண்டு நாட் களில் அடுத்தடுத்து மூன்று முக்கிய ரயில் தீ விபத்துகள் ஏற்பட்டுள் ளதால் பயணிகள் மத்தி யில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் டில்லி நோக்கிச் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து, அய்தராபாத் ரயில் தீவிபத்து  அடுத்த நாளே பீகாரின் சசாரம் ரயில் நிலையத்திலும் மற்றொரு ரயில் தீப்பற்றி எரிந்துள்ளது.

பீகார் மாநிலம் சசாரம் ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடையில், பாட்னா நோக்கிப் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்த ‘சசாரம்-பாட்னா விரைவு பயணிகள் ரயில்’ பெட்டி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறியதை அடுத்து, நடைமேடையில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தீவிரமாகப் போராடி தீயை அணைத்தனர்.

மின்கசிவு காரண மாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில் புறப்படுவதற்குச் சற்று முன்பாக இந்தச் சம்பவம் நடந்ததாலும், ஊழியர்களின் விரைவான நடவடிக்கையாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கு முந்தைய நாள் (17.5.2026), மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் தில்லி நோக்கி அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ‘ராஜ்தானி விரைவு ரயிலின்’ குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் ஒன்றில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.   வெறும் 48 மணி நேர இடைவெளியில் போபால் (மத்தியப் பிரதேசம்) மற்றும் சாசாரம் (பீகார்) மற்றும் அய்தராபாத்தில் நிகழ்ந்துள்ள இந்தத் தீவிபத்துகள் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *