அமெரிக்க விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்: பிறந்த குழந்தைகள் முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கும் நேர்காணல் கட்டாயம்!
சென்னை, ஆக.16 இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்ப நடைமுறைகளில் அமெரிக்க தூதரகம் முக்கிய புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி 17 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் அனைவரும் விசா நேர்காணலுக்குப் பெற்றோருடன் கட்டாயம் நேரில் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது!
கொல்கத்தா, ஆக.16 வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் மேற்குவங்கம்- ஒடிசா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மய்யம்…
முல்லைப் பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் கேரள மக்கள் பாதுகாப்பு சமிதி நகல் எரிப்பு
தொடுபுழா, ஆக.16 முல்லைப் பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்கு போடப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என 'கேரள மக்கள் பாதுகாப்பு சமிதி' தொடு புழாவில் நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தினர். இதனால் கேரளாவில் மேலும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.…
கொடியேற்றும் அணிவகுப்பு மரியாதையில் அரசின் இரட்டை எஞ்சின் வாகனம் பழுது!
மதுரா, ஆக. 16- உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள நாட்டின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உத்தரப் பிரதேச மாநில அமைச்சர், கொடியை ஏற்றி வைத்து…
அய்ரோப்பாவை கடுமையாக தாக்கும் வெப்ப அலை பலி எண்ணிக்கை 16 ஆயிரமாக உயர்வு
பிரஸ்ஸல்ஸ், ஆக. 16- அய்ரோப்பாவை கடுமையாக தாக்கி வரும் வெப்ப அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. அய்ரோப்பா நாடுகளான பெல்ஜியம், பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகியவை வெப்ப அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. பலியானோர் எண்ணிக்கை 16…
தமிழ்நாட்டில் பொறியியல் கல்வி சேர்க்கை நாளை தொடங்குகிறது 3ஆம் கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்!
சென்னை, ஆக. 16- தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் பி.இ, பி.டெக்.…
செய்தியும், சிந்தனையும்…!
* தமிழ்நாடு திட்டங்களுக்கு ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்போம் - சுதந்திர நாள் விழாவில் முதலமைச்சர் விஜய் பேச்சு! ** புதிய கல்வித் திட்டம், 100 நாள் வேலை திட்டங்களிலிலுமா?
மோடியின் தொகுதியான வாரணாசி விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு இரு ஊழியர்கள் காயம்; பயணி கைது!
வாரணாசி, ஆக. 16- உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் துப்பாக் கிச்சூடு நடத்தப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியில் இருந்து மும்பைக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கி யால் திடீரென சுட்டு…
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 47 பேர் பலி, 13 பேர் காயம்; மீட்புப் பணி தீவிரம்
மவ்மேரே, ஆக. 16- இந்தோனேஷியா வின் கடற்கரைக்கு அருகே நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 47 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தோனேஷியாவின்…
ஜப்பானில் வரலாறு காணாத கனமழை 7 ஆயிரம் பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!
டோக்கியோ, ஆக. 16- நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என அவ்வப்போது இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் ஜப்பான், தற்போது வரலாறு காணாத கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு…
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி (17.8.2026) கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட கழகத் தோழர்கள் உள்ளனர். (16.8.2026)
பஞ்சாபில் மீண்டும் தலைதூக்கும் பிரிவினைவாதம்!
சண்டிகர், ஆக.16 முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திராவின் கொலை சதி வலையில் குற்றஞ்சாட்டப்பட்டு, துாக்கிலிடப்பட்ட கெஹர் சிங். அவருடைய …
