விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை!
திருச்சி, ஜூலை 19- விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள் படைத்து பரிசு, பதக்கங்களைக் குவித்துள்ளனர். 11ஆம் வகுப்பு மாணவி பி.ஹாஃபிஷா பர்வீன் 18ஆவது மாவட்ட அளவில் நடைபெற்ற Wushu Championship போட்டியில் கலந்து கொண்டு 3…
‘நீட்’ வினாத்தாள் வழக்கு! தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே வேதியியல் கேள்விகள் கசிவு சி.பி.அய். விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
மும்பை, ஜூலை 19- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கை பல அதிர வைக்கும் உண்மை களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த…
பூரி ரத யாத்திரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை அரசு மூடி மறைக்கிறது! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
புவனேஸ்வர், ஜூலை 19- ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலின் ரத யாத்திரையில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ஏராளமான பக்தர்கள் திரண்ட இந்த விழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,…
‘வியாபம்’ ஊழல் மூலம் பணிக்கு வந்த அதிகாரி லஞ்சப் புகாரில் கைது! சி.பி.அய். நடவடிக்கை!
புதுடில்லி, ஜூலை 19- மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘வியாபம்' (Vyapam) ஊழல் முறைகேட்டில் பணி நியமனம் பெற்ற பொதுத்துறை நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சிபிஅய் அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். கருநாடக…
அரசுப் பேருந்துக் கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயார்! ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
சென்னை, ஜூலை 18- தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணத்தில், ஆண்டு முழுவதும் 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயல கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்…
மாணவர்களின் மன உறுதியை காக்க ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தில் மனநல ஆலோசனை பெறலாம்! கட்டணமில்லா தொலைபேசி எண் 14416, 104 அறிவிப்பு
சென்னை, ஜூலை 19- மாணவர்களின் மன உறுதியை காக்க ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தில் மனநல ஆலோசனை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கட்டணமில்லா தொலைபேசி எண் 14416, 104 அறிவித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது…
செய்தித் துளிகள்
குடும்ப அட்டைதாரர்கள் உடனே இதை செய்யுங்கள்! தமிழ்நாட்டில் அந்தியோதயா குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் விரல்ரேகை பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 31–ஆம் தேதிக்குள் முடிகிறது. குடும்ப அட்டைதாரர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த, இகேஒய்சி (eKYC) தற்போது மேம்படுத்தப்பட்ட பதிவிற்கு…
தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு தீவிரம் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வரும் பொதுமக்களிடம் அதிரடி சோதனை!
சென்னை, ஜூலை 19 சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப் பிரிவில், பொதுமக்கள் நாள்தோறும் தங்களின் கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே, கடந்த நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண் முதலமைச்சர்…
உத்தரப்பிரதேச பல்கலைக்கழக விடுதிகளில் மாமிச உணவுக்கு அனுமதி இல்லையாம்!
லக்னோ, ஜூலை 19 விடுதியில் அசைவ உணவு சமைப்பதற்குத் தடை விதித்து உத்தரப் பிரதேச மாநில கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது கண்டனத்திற்கு உள்ளானது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் அன்றாட புரோட்டீன் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மீல்…
அயோத்தி ராமன் கோயில் நிதி முறைகேடு அரசு மற்றும் வங்கி அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!
அயோத்தி, ஜூலை 19 உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமன் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை நிதியில் முறைகேடு மற்றும் திருட்டு நடந்துள்ளதாக எழுந்த புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பான புகார்களை விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு அமைத்துள்ள…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது
புதுடில்லி, ஜூலை 19 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங் குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் டில்லியில் அனைத் துக் கட்சிக் கூட்டம் இன்று (19.7.2026) கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இருந்து எதிர்க் கட்சிகள்…
“யுனெஸ்கோ மன்ற விருதும், ‘இனமலர்’ கும்பலின் ரீல்களும்!”
“ஏம்ப்பா குழலி... பெரியாருக்கு யுனெஸ்கோ மன்ற விருது கொடுத்ததுன்னு நாம படிச்சதைப் பொய்யிங்குற மாதிரி ஒரு பத்திரிகையில் எழுதியிருக்காங்களே... என்னப்பா சமாச்சாரம்?” என்றார் கதிரவன். “அவா ‘லோக குரு’, ‘விஸ்வ குரு’ன்னு பட்டம் கொடுத்துக்குறாங்களே... அதெல்லாம் யாரு கொடுத்ததுன்னு அவா கிட்ட…
