விமான எரிபொருள் வரி ரத்து: ஒன்றிய அரசுக்கு விமான நிறுவனங்கள் அவசரக் கோரிக்கை!

1 Min Read

மும்பை, ஏப். 29- மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் எதிரொலியாக, இந்தியாவில் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

இயக்கச் செலவு அதிகரிப்பு:

விமானங்களை இயக்குவதற்கான மொத்தச் செலவில் 40 சதவீதம் எரிபொருளுக்காக மட்டுமே செலவிடப்படு கிறது. தற்போதைய விலை உயர்வால் நிறுவனங்களின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சேவை முடங்கும் அபாயம்:

எரிபொருள் விலையில் செய்யப்படும் தன்னிச்சையான மாற்றங்கள் நிறுவனங் களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். இது தொடர்ந்தால், விமான சேவைகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்படும் சூழல் உருவாகலாம்.

நிதியுதவி மற்றும் வரிச் சலுகை:

தற்போதைய நெருக் கடியைச் சமாளிக்க ஒன்றிய அரசு உடனடியாகப் பொருளாதார உதவிகளை வழங்க வேண்டும். குறிப் பாக, விமான எரிபொருள் மீதான 11 சதவீத கலால் வரியை (Excise Duty) தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். விமானப் போக்குவரத்துத் துறை சந்தித்து வரும் இந்த சவாலான சூழலில், அரசின் தலையீடு இருந் தால் மட்டுமே தொடர்ந்து சீராகச் செயல்பட முடியும் என அக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *