இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடியளவில் பாதிப்பு
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு இந்திய சந்தையை பெருமளவில் பாதித்துள்ளது. அந்த வகையில், ஆந்திராவின் கடல்சார் வணிகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இறால் ஏற்றுமதிக்கான 50% ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதால் ரூ.25,000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில்…
பக்தியால் படுகொலை! அம்மனுக்கு படைத்த தேங்காயை பெறும் விவகாரத்தில் பெண் படுகொலை – உறவினர் வெறிச்செயல்
பெங்களூரு, செப்.17 கருநாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா சிங்கரகாவா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அமேசத் கிராமத்தைச் சேர்ந் தவர் பாக்யஸ்ரீ. இவரது உறவினர் தொண்டுவரகா. அதாவது பாக்யசிறீக்கு தொண்டுவரகா, மாமா உறவுமுறை என்று கூறப்படுகிறது. பாக்யசிறீக்கு திருமணமாகி…
இதோ பெரியாரில் பெரியார்! அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி
அண்ட பிண்ட சராசரம் அத்தனையும் உற்பத்தி செய்த அக்கடவுள் இருக்குமிடம் எங்கென்று பார்த்தால், அவர் முப்பாழுக்கும் அப்பாலாய் இருப்பவர் என்று கூறப்படுகிறது. “அப்பால்தான் என்னப்பா இருக்கிறது?" என்று கேட்டால், “அதுவும் பாழடா" என்று தான் என்று கூறப்படுகிறது. வெறும் சூனிய வெளிதான்…
கழகத் தோழர்கள் அணி வகுத்து வந்தனர்
தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் அணி வகுத்து வந்தனர்
தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தோழர்களுடன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை. திண்டிவனம் சிறீராமுலு தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை.
ஒவ்வொரு சொல்லும் உண்மையுணர்வோடு வந்தது
பெரியாரது மனம், இதுபோது மிகவும் முக்கியமான சமுதாயத் துறையிலீடுபட்டிருக்கிறது. கோட்டயத்தில் நடைபெற்ற எஸ்.என்.டி.பி. மாநாட்டில் 10,000க்கும் அதிகப்பட்ட மக்கட்கு, இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழியை யான் கேட்டேன். சொற்பொழிவு எளியதாகவும், நேரானதாகவுமிருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு…
வீ. அன்புராஜ் திறந்து வைத்து மாலை அணிவித்தார்
படிக்கட்டு அமைத்து புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்து மாலை அணிவித்தார். (17.9.2025, காஞ்சிபுரம்)
எளிய வாழ்வு
பெரியார் அவர்கள் எளிய வாழ்வு என்று சொல்லிக் கொள்ளாமல், வறியவனும் வெறுக்கக் கூடிய வண்ணம் பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்காவிட்டால் பட்டினியுமே. ஸ்நானம் 4, 5 நாட்களுக்கு இல்லாமலே போனாலுமே போய்விடும். கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியது. (பிறர்)…
காலத்தை வென்ற ஞாலப் பெரியார்
புதினப் படைப்பில் புகழ் எய்திய 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அவர்கள், "அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுமுணர்ந்த பேராசிரியர், என்பதில் சந்தேகமில்லை. பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல் தமிழ்நாட்டில் வேறெவரையும் விட அவருக்கு அதிகம் உண்டு. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும்,…
