சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

2 Min Read

ராஸ் தனுரா, ஜூன் 29– சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று (29.6.2026) விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.

உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் சவுதி அரசின் அராம்கோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹார்முஸ் நீரிணையின் மேற்கு கடலோரப் பகுதியான ராஸ் தனுரா என்ற பகுதியில் அமைந்துள்ளன. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் போக்குவரத்து முடங்கியதால், அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் கடந்த 4 மாதங்களாக எந்தப் பணியும் நடைபெறாமல் இருந்தது. இதனால் பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் முற்றிலும் தடைபட்ட நிலையில் இருந்தன.

இந்நிலையில் ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஹார்முஸ் ஜல சந்தியில் கடந்த சில நாட்களாக கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதனால் அராம்கோ நிறுவ னத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் மீண்டும் பணிகள் தொடங்கின.

இங்கு பணியாற்றும் அராம்கோ நிறுவனத்தின் அதிகாரிகள், பொறியாளர்கள், தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்வது வழக்கம். இங்கு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து, நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் 14 ஊழியர்கள் பயணம் செய் தனர்.

எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் நேற்று காலை விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரும் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் குறித்து சவுதி அரேபிய அரசு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ராஸ் தனுராவில் நேற்று காலை 6 மணி அளவில் விபத்தில் சிக்கியதை அறிவிப்பதில் எரிசக்தி துறை அமைச்சகம் வருந்துகிறது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த சவுதி அரேபியர்கள் 14 பேரும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *