கரூர்; மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ரயில்வே தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கு, நாளை (26.11.2026) முன்பதிவு செய்து கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ள தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் போட்டி தேர்வர்கள், இரண்டு பாஸ் போர்ட் சைஸ் ஒளிப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், ஆதார்அட்டை நகலுடன் நாளை (26ஆம் தேதி) முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்பில் பயிற்சிக்கான அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வு, வாராந்திர தேர்வு, இணையவழி தேர்வு, முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, 04324223555, 63830 50010, 63743 19939 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
