ஹிந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர் கழகம், இளைஞரணி ஆர்ப்பாட்டம்!
விவசாயிகள் உரிமை காக்க விவசாயத் தொழிலாளரணி ஆர்ப்பாட்டம்!
பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வலியுறுத்தி கழக மகளிரணி, மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்!
நவ.28 தமிழ்நாடே ஆர்ப்பாட்டக் களம் காணட்டும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
விவசாயிகள் உரிமை காக்க விவசாயத் தொழிலாளரணி ஆர்ப்பாட்டம்!
பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வலியுறுத்தி கழக மகளிரணி, மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்!
நவ.28 தமிழ்நாடே ஆர்ப்பாட்டக் களம் காணட்டும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
ஹிந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர் கழகம், இளைஞரணி ஆர்ப்பாட்டம்! விவசாயிகள் உரிமை காக்க விவசாயத் தொழிலாளரணி ஆர்ப்பாட்டம்! பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வலியுறுத்தி கழக மகளிரணி, மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்! நவம்பர் 28 தமிழ்நாடே ஆர்ப்பாட்டக் களம் காணட்டும்! த.வெ.க. ஆட்சியில் ஹிந்தி, இங்கிலீஷ் என்பதுதான் இருமொழிக் கொள்கையா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
- ஹிந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர் கழகம், இளைஞரணி ஆர்ப்பாட்டம்! விவசாயிகள் உரிமை காக்க விவசாயத் தொழிலாளரணி ஆர்ப்பாட்டம்! பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வலியுறுத்தி கழக மகளிரணி, மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்! நவ.28 தமிழ்நாடே ஆர்ப்பாட்டக் களம் காணட்டும்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார்?
- திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி ஆர்ப்பாட்டம்
- டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளரணி ஆர்ப்பாட்டம்
- திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதலே தொடர்ந்து ஹிந்தித் திணிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதை எடுத்துக்காட்டி கண்டித்து வருகிறோம். நாம் சுட்டிக் காட்டும் போதெல்லாம் பிறர் மீது பழியைப் போட்டோ, அதிகாரிகளை மாற்றியோ, மென்பொருள் குறை என்று சொல்லியோ அமைச்சர்கள் பதிலளிக்கிறார்கள். ஒரு புறம் ஒன்றிய அரசு இரயில்வே துறையிலும், தேசிய நெடுஞ்சாலைத் துறையிலும் ஹிந்தித் திணிப்பைச் செய்யத் தொடங்குகிறது. மற்றொரு புறம் தமிழ்நாடு அரசோ முதலில் மாநில நெடுஞ்சாலைத் துறை, பிறகு மருத்துவத் துறை, அடுத்து அரசு ஊழியர்கள் பயன்படுத்தும் ஹெச்.ஓ.டி இணையதளத்தில் ஹிந்தித் திணிப்பு, பத்திரப் பதிவுத் துறையில் தமிழ் மறுப்பு.
அந்த வரிசையில் தற்போது முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையில் போக்குவரத்து விதி மீறலுக்கு வழங்கி இருக்கும் செலுத்துகைச் சீட்டு இது. இதில் தமிழ் எங்கே? ஹிந்தி எதற்காக?
காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும்
முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார்?
முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார்?
ஆங்கிலமும், ஹிந்தியும் தான் த.வெ.க. அரசின் இரு மொழிக் கொள்கையா? இதற்கு யாரை நோக்கிக் கை காட்டுவீர்கள்? யார் மீது நடவடிக்கை எடுப்பீர்கள்?
காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் முதல மைச்சர் என்ன பதில் சொல்கிறார்? நடப்பது யார் ஆட்சி? பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசு தான் த.வெ.க. என்னும் லேபிள் ஒட்டி இங்கு நடைபெறு கிறதா?

திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி ஆர்ப்பாட்டம்
அப்பட்டமான ஹிந்தித் திணிப்பு தமிழ்நாடு அரசினாலேயே மேற்கொள்ளப்படுவது தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கும், தமிழுக்காக உயிர் துறந்த எண்ணற்ற மொழிப் போர் வீரர்கள், வீராங்கனைகளுக்கும் இழைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் துரோகம்! இதை ஒரு போதும் தமிழ்நாடு அனுமதிக்காது.
தொடரும் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்துத் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் வரும் நவம்பர் 28 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளரணி ஆர்ப்பாட்டம்
பருவமழை பொய்த்ததாலும் காவிரியில் உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததாலும், டெல்டா விவசாயிகள், குறுவைப் பயிரும் பாதிக்கப்பட்டு, பின்னர் காலந் தவறி திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுவிட்டதால், அதை நம்பிப் பயிரிடப்பட்ட சம்பாவும் கருகி அழியும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடும், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட வேண்டும். தொடரும் மேகதாது அணை மிரட்டலுக்கு மாநில அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி, உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் திராவிட விவசாயத் தொழிலாளரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
திராவிடர் கழக மகளிரணி –
திராவிட மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்
திராவிட மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்
பச்சிளம் குழந்தைகள் கடத்தல், பெண் குழந்தை களுக்குப் பாதுகாப்பின்மை, மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை பெண் அதிகாரிகளுக்குமே ஆளுங்கட்சி யினரிடமிருந்து பாலியல் தொல்லைகள் (கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது, காவல்துறையில், அம்மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளதாக இன்று செய்திகள் உறுதிப்படுத்துகின்றன) என தொடரும் பாலியல் அநீதிகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை ஆகிய அமைப்புகள் சார்பில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெறும். (மூன்று ஆர்ப்பாட்டங்களும் நடை பெறும் மாவட்டங்களின் பட்டியல் தனியே வெளி யிடப்பட்டு உள்ளது.)
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த மும்முனை ஆர்ப்பாட்டங்களைக் கழகத் தோழர்கள் உடனடியாக ஒருங்கிணைத்து, எழுச்சிகரமாக நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.11.2026
