பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

1 Min Read

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: சீனியர் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 10, மெக்கானிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 2 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 1.6.2026 -தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, நிறைவு செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: AGM (HR & Administration), Bharat Electronics Limited, BEL-Army school road, Nandambakkam, Chennai – 600 089.

கடைசி நாள்: 8.7.2026

கூடுதல் விவரங்களுக்கு: bel-india.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *