இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் படி பதிவு செய்தால் செல்லாது : உயர்நீதிமன்றம்

- Advertisement -

சென்னை, நவ. 24- ‘இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது சட்டப்படி செல்லாது’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளை ஞருக்கும் 2009, பிப்.20 அன்று சென்னையில் திருமணம் நடைபெற்றதாக இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரு சார்-பதி வாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்த திருமணம் தனது விருப்பத்துக்கு மாறாக தன்னை ஏமாற்றி நடந்த திருமணம் என்பதாலும், தான் கிறிஸ்தவர் என்பதால் இந்து திருமண சட்டத்தின்கீழ் அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக்கோரி, சம்பந்தப்பட்ட இளைஞர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதை எதிர்த்து அவர், சென்னை உயர் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், எஸ். ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் இளைஞர், தான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மனுதாரர், 1998 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் ஞானஸ்நானம் பெற்றதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறியதை குடும்பநல நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

ஏற்கெனவே கிறிஸ்தவராக இருப்பவர் மற்றொரு கிறிஸ்தவ சபையில் இணையும்போது புதிதாக ஞானஸ்நானம் பெறுவது வழக்கமானதுதான். இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 5-இன்படி திருமணம் செய்து கொள்ளும் கணவன் – மனைவி இருவருமே இந்துக் களாக இருக்க வேண்டும்.

அதன்படி இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது அதை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் அது சட்டப்படி செல்லாது. மேலும், தமிழ்நாட்டில் நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் பிரிவு 7-ஏ-ம் இதுபோன்ற திருமணங்களுக்கு பொருந்தாது.

சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டாலும் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். திருமணப் பதிவின்போது அளிக்கப்படும் விவரங்களின் உண்மைத் தன்மையை சார்-பதிவாளர்கள் சரிபார்க்க வேண்டும்.

ஒருவேளை இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந் தவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் என அதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.

இந்த வழக்கில், திருமணம் பதிவு செய்யப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் கழித்தே அது சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டிய சூழல் வேதனை அளிக்கிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இந்த தீர்ப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சார்-பதிவாளர்களுக்கும், குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கையாக பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர்.

அத்துடன் மனுதாரரின் திருமணப்பதிவு சட்டப்படி செல்லாது என அறிவித்து குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *