திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் அறிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் இருப்பது ‘கிரேட் டிரிகோ னோமெட்ரிக்கல் சர்வே’ (Great Trigonometrical Survey – GTS) எனப் படும் நில அளவை தூண் என்பதைத் தமிழ்நாடு அரசின் 2026-ஆம் ஆண்டு அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் தீர்வைகள் துறையும், தொல்லியல் துறையும் இணைந்து தயாரித்த 2026-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு அருகில் இருக்கும் தூண், ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட ‘கிரேட் டிரிகோனோமெட்ரிக்கல் சர்வே’ (GTS) தூண் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் துறைகள் தயாரித்த வரைபடத்தில், உண்மையான ‘தீபத்தூண்’ தர்காவிற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை நிலவும் சூழலில், இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம், சர்வே கல்லில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போதைய நில அளவையின்படி, சிக்கந்தர்மலை (திருப்பரங்குன்றம்) நிலையத்திலிருந்து நாகமலை, சத்ரகிரி, கோபால்சாமி, குட்டிப்பாறை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பொன்னுருக்கிமலை மற்றும் பெருமாள் மலை போன்ற பிற இடங்களுக்கு எடுக்கப்பட்ட முக்கோண அளவீடுகள் (triangulation bearings), ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த GTS அறிக்கையில் உள்ள மதிப்புகளுடன் ஒத்துப் போகின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
“இந்த அளவீடுகள், சிக்கந்தர் மலையில் நிறுவப்பட்ட தூணும், பாறையின் மேற்பரப்பில் பொறிக்கப் பட்டுள்ள வட்டத்திற்குள் புள்ளி கொண்ட குறியீடுகளும் ஒரு நில அளவை தூணின் அங்கங்களே என்பதைக் காட்டுகின்றன” என்று நில அளவை மற்றும் தீர்வைகள் துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் தயாரித்த அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 1,800 பக்கங்களுக்கு மேல் கொண்ட அய்ந்து தொகுதி களாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், ஆய்வின் முதற்கட்ட மாக 800-க்கும் மேற்பட்ட நிலையங்கள் கண்டறியப்பட்டன. இவற்றில், 210 முதன்மை நிலையங்கள் மற்றும் 274 இரண்டாம் நிலை நிலையங்கள் என மொத்தம் 484 நிலையங்கள் நேரில் சென்று ஆவ ணப்படுத்தப்பட்டன. இதில் கல் தூணையும், கல் குறியீட்டையும் கொண்ட ஓர் இரண்டாம் நிலை நிலையமாகதிருப்பரங்குன்றம் இருந்துள்ளது.
தமிழ்நாட்டின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, அனைத்து ஜி.டி.எஸ் (GTS) நிலையங்களையும் முறையாகக் கண்டறிந்து ஆவணப்படுத்துமாறு டிசம்பர் 2025-இல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2026-இல், இந்த அறிக்கையை வெளியிட வருவாய் துறை அனுமதி அளித்தது. நில அளவை மற்றும் தீர்வுத் துறை (Department of Survey and Settlement), தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
இந்த ஆய்வில், முக்கோண அளவீட்டு முறை (triangulation) மூலம் நிலையங்கள் நிறுவப்பட் டன. இம்முறையில், ஓர் அடிப் படைக்கோட்டை ஆதாரமாகக் கொண்டு, அடுத்தடுத்த புள்ளிகளுக்கு இடையிலான கோணங்கள் அளவிடப்படுகின்றன. மலைப் பாங்கான நிலப்பரப்புகளில், பார்வைக் கோடுகள் தெளிவாக அமைந்ததால், முக்கோண அளவீட்டுப் புள்ளிகளை நிர்ணயிப்பது எளிதாக இருந்தது; அதே சமயம், சமவெளிப் பகுதி களில் பார்வைத்திறன் குறைவாக இருந்ததால், அதிக எண்ணிக்கை யிலான நிலையங்களை நிறுவ வேண்டியிருந்தது.
வரலாற்று ரீதியாக, இத்தகைய நில அளவை நிலையங்களும் கட்டுப்பாட்டுப் புள்ளிகளும் ஜி.டி.எஸ் வரைபடங்கள், நிலப்பரப்பு வரைபடங்கள் (topo sheets), கிராம வரைபடங்களில் துல்லியமாகக் குறிக்கப்பட்டிருந்தன. இவை நிலவரைபடம் தயாரிப்பதற்கும், நில மேலாண்மைக்கும் அடிப்படையாக விளங்கின. இருப்பினும், காலப் போக்கில் ஏற்பட்ட விரைவான மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல், இயற்கைப் பேரிடர்களால் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், விரிவான தொழில்மயமாக்கல், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் போன்ற காரணங்களால், அசல் நிலையங்களில் பலவற்றை இன்று கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜி.டி.எஸ் நிலையங்களையும் முறை யாகக் கண்டறிந்து, வரைபட மாக்கி, ஆவணப்படுத்திப் பாது காப்பதற்கான ஒரு விரிவான களப்பணியை மேற்கொள்ளவும், மேலும் அந்த நிலையங்களின் ஆயத்தொலைவுகளைப் (coordinates) பயன்படுத்தி மாநிலத்தில் அடுத் தடுத்த நில அளவைப் பணிகளை மேற்கொள்ளவும் நில அளவை மற்றும் தீர்வு இயக்குநரகம் (Director of Survey and Settlement) முன்மொழிந்துள்ளது.
ஆங்கிலத்தில்: பி.கோலப்பன்
தமிழில்: சமா
