நன்கொடை
பெரியார் நகரில் உள்ள அரசி ஆர்க்கிடெக்ட்ஸ் & இன்டீரியர்ஸ் – நிறுவனர் பி. தமிழ்ச்செல்வி மற்றும் எம். செந்தில்குமார் ஆகியோர் இயக்க நன்கொடைக்கு ரூ.25,000 தமிழர் தலைவரிடம், வழங்கினர். உடன்: தி.செ. கணேசன், பேராசிரியர் வி. டெய்சிமணியம்மை, மகிழ்நன், கி. அதிரா…
பழங்குடி பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாம் மோடி அரசின் அடுத்த அடாவடி மொழியியல் நிபுணர்கள் கண்டனம்
புதுடில்லி,அக்.21 ஏக்லவ்யா மாதிரி விடுதிப் பள்ளிகள் (Eklavya Model Residential Schools) என்பவை பழங்குடியின மாணவர்களுக்காக ஒன்றிய அரசு நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகளாகும். இந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கல்வி, உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகின்றன.…
ஹிஜாப் விவகாரம் பாதிக்கப்பட்ட மாணவி வேறு பள்ளியில் சேர கேரள அரசு உதவி கல்வி அமைச்சர் சிவன்குட்டி உறுதி
திருவனந்தபுரம், அக்.21 கேரளாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 8-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி வேறு பள்ளியில் சோ்க்கை பெறுவதற்கு மாநில அரசு உதவத் தயாராக உள்ளது என்று கேரள கல்வி அமைச் சா் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார். ‘இந்தக்…
பிஜேபி ஆளும் குஜராத்தில் பதவி மோதல்! குஜராத் ஒட்டுமொத்த அமைச்சர்கள் பதவி விலகல் மறுநாள் 25 புதுமுகங்களோடு மீண்டும் பதவி ஏற்பு
காந்திநகர், அக்.21 குஜராத்: முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான குஜராத் பா.ஜ.க. ஆட்சியில் திடீர் மற்றும் அதிரடியான அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. முதலமைச்சர் பூபேந்திர படேல் நீங்கலாக, அமைச்சரவையில் இருந்த மொத்தம் 16 அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகியுள்ளனர். இந்தச் செயல்…
அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை டிரம்ப் விருப்பத்தை நிராகரித்த ஈரான் தலைவர் காமேனி
காசா, அக்.21 இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முக்கிய காரணமாக இருந்தார். அவர் இஸ்ரேல்- காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக எகிப்து வந்தார். அதற்கு முன்னதாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்று, அங்குள்ள நாடாளுமன்றத்தில்…
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை
சென்னை, அக். 21- சென்னையில், வானிலை ஆய்வு மய்ய தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அரபி கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு…
வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி,அக். 21- தேனியின் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது 5,169 கனஅடியாக உள்ள உபரி நீர் திறப்பு, படிப்படியாக…
அழகப்பா தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் நானோ அறிவியல் தொழில்நுட்பம் குறித்து இரண்டு வார இணையதள பயிற்சி நவம்பர் 18க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக். 21- நானோ அறிவியல், தொழில்நுட்பம் குறித்து இளநிலை, முதுநிலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி யாளர்களுக்கு ஆன்லைனில் 2 வார சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக திகழும் அழகப்பா…
மதவெறித் தீயை கக்கும் ஒரு சங்கி ‘‘இந்துக்கள் அல்லாதவர் வீட்டுக்கு மகள் சென்றால் அவளது காலை உடையுங்கள்’’ மாலேகான் ‘புகழ்’ பிரக்யா தாக்கூர் பேச்சு
போபால், அக்.21- ‘‘இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு மகள் சென்றால், அவரது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும்’’ என்று மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்குர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சைப்பேச்சு மத்திய பிரதேச மாநிலம் போபால் பாஜக மேனாள்…
யுபிஅய் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? பாதிக்கப்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
சென்னை, அக். 21- போலியான யுபிஅய் செயலிகள், க்யூஆர் குறியீடு மோசடி என மோசடியாளர்கள் விதவிதமாக அலைகிறார்கள். டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை அதிகரிப்பது போல மோசடி வழக்குகளும் அதிகரிக்கின்றன. சிறு தொகை வரவு வைத்து திருடுதல்: யுபிஅய் மூலம் மோசடி…
